For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா எழுந்து வா... : ஜெயலலிதாவிற்காக உருகும் அதிமுகவினர்... - வைரல் வீடியோ

தாயின் முகம் பார்க்க கோடி பிள்ளைகள் காத்திருக்கிறோம்... அம்மா எழுந்து வா... புயலாக எழுந்து வா என்று அதிமுகவினர் ஜெயலலிதாவிற்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது 'ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினோம்'.... என்று உருக்கமாக பாடி பிரார்த்தனை செய்தனர்.

32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதே சரித்திரம் திரும்பியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த 47 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்காக நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

AIADMK dedicates special video message to celebrate Amma’s good health

ஜெயலலிதா பூரண நலம் பெற்றுள்ளதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் சி. ரெட்டி பேட்டியளித்த போது அதிமுகவினர் உற்சாகமடைந்தனர். எனினும் கடந்த 47 நாட்களாக ஜெயலலிதாவை காணாமல் தவிக்கும் தொண்டர்கள் அவருக்காக உருகும் வகையில் பாடல் பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதனை அதிமுக ஐடி அணி வெளியிட்டுள்ளது.

அந்தப் பாடலில்...

அம்மா எழுந்து வா...

புயலாய் எழுந்து வா...

கோடி தமிழரின் முகமே மலர்ந்து வா...

தமிழ் மண்ணை காக்க தமிழ் மகளே விரைந்து வா...

தாயின் முகம் பாரா பிள்ளைகள் நாம்...
என கேட்பவர்களின் உள்ளத்தை உருகும் வகையில் வரிகள் இடம் பெற்றுள்ளன.

என்று பாடல் பாடி அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஜெயலலிதாவின் பிரச்சார பேச்சுக்கள், மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதா நலம்பெற வேண்டி செய்யும் பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இசைக்கோர்வையும் சரியில்லை, பாடலை பாடியவரும் சரியில்லை என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. ஆனாலும் இந்த நேரத்தில் இந்த பாடல் அதிமுகவினரிடையே புயலாக வைரலாகி வருகிறது.

English summary
According to Apollo Hospitals, the chief minister has completely recovered. Amma will be soon discharged from the hospital, added the statement issued by the hospital.In order to celebrate the "good news", the party has released a special video message. The message was posted on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X