For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் எம்.எல்.ஏவான ஓமலிங்கம் புதுச்சேரி எம்.பி வேட்பாளரானார்

By Mayura Akilan
|

புதுச்சேரி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் புதுச்சேரி யூனியன் பிரதேச தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.வி. ஓமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காரைக்கால் கோட்டுச்சேரியில் 1972ல் பிறந்த ஓமலிங்கம். டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

இவரது தந்தை பாலா வைத்திலிங்கம். முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., தாயார் காந்திமதி. ஓமலிங்கத்திற்கு திருமணமாகி சாவித்திரி என்ற மனைவியும், கிஷோர், கந்தவேல் என்ற 2 மகன்களும், பவித்ரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

AIADMK fields Omalingam for Puducherry LS seat

முன்னாள் எம்.எல்.ஏ

காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோட்டுச்சேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

எம்.பி வேட்பாளர்

தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போது அதிமுக தலைமை இவரை எம்.பி வேட்பாளராக அறிவித்துள்ளது. வெற்றி பெற்று தனது திறமையை நிரூபிப்பாரா ஓமலிங்கம்? என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

காரைக்காலில் பிரபலம்

எம்.வி. ஓமலிங்கம் காரைக்காலில் பிரபலமானவர். இவரது தந்தை வைத்தியலிங்கம் 1989 - 1991 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.வாக இருந்தவர் என்பதால் புதுச்சேரி வாக்காளர்களிடையேயும் பிரபலமானவர் ஓமலிங்கம்.

பிரகாசமான வாய்ப்பு

இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது புதுச்சேரியில் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருக்கும் நாராயணசாமிக்கே காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஓமலிங்கத்தின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Even as other major political parties are yet to finalise electoral alliance in the Union Territory of Puducherry, the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has chosen a relatively known person as its candidate. M.V. Omalingam had been the Member of Legislative Assembly, representing Kottucherry constituency in Karaikal region, between 2006 and 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X