அலங்காநல்லூரில் முன்னெச்சரிக்கை கைது மட்டுமே- மாணவர்கள் விடுதலை உறுதி- எஸ்.பி. விஜயேந்திர பிதாரி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி அலங்காநல்லூரில் 21 மணிநேரம் போராட்டம் நடத்திய இளைஞர்கள், மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என மதுரை எஸ்பி விஜயேந்திரா பிதாரி உறுதியளித்துள்ளார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. 21 மணிநேரத்திற்கு மேல் போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை போலீஸ் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி,
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என்றும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் எஸ்.பி உறுதியளித்தார். அமைதியான போராட்டத்திற்கு போலீஸ் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் விஜயேந்திர பிதாரி கூறினார். ஆனால் மாவட்ட எஸ்.பி.யின் சமாதான பேச்சுவார்த்தையை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications