For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

(விஜய் மல்லயாவை விளாசுவது லேடஸ்ட் ஃபேஷன். 'என் சாம்ராஜ்யத்தின் வசதிகளை அனுபவித்த ஊடகர்களின் லிஸ்ட் நீளமானது' என்று அவர் லண்டனில் பேட்டி கொடுத்த நிமிடத்தில் இருந்து, பாரம்பரிய வெகுஜன ஊடகம் அடக்கி வாசிக்கிறது. அப்பாவி சமூக ஊடகம் தொடர்ந்து அடிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் எந்தளவுக்கு வாழ்க்கையை அனுபவிக்க முடியுமோ அதற்கு மேலேயே பார்த்துவிட்டார் விஜய் மல்லயா. சிக்ஸ் மெஷின்: ஐ டோன்ட் லைக் க்ரிக்கெட்... ஐ லவ் இட் என்ற தலைப்பில் க்ரிஸ் கெய்ல் எழுதியுள்ள புத்தகம் அவருடைய சுயசரிதையாக இருந்தாலும், அதில் மல்லயாவின் சித்திரம் மலைக்க வைக்கிறது. ஏழையாக பிறந்து இன்று உலக புகழ் பெற்ற க்ரிக்கெட் வீரராக திகழும் கெய்லின் முதல் புத்தகம் இது. பிபிசியின் தலைமை விளையாட்டு எழுத்தாளர் டாம் ஃபோர்டிசுடன் இணைந்து எழுதியுள்ளார். 288 பக்கம் கொண்ட பெங்குயின் பிரசுரம் ஜூன் 2 வெளியாகிறது. அதன் சில பகுதிகளை டைம்ஸ் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...)

இந்தியால போய் விளையாட்றது அப்பெலாம் எனக்கு பிடிக்காது. ஒரே வெயிலு, புழுதி, அழுக்கு. ஸ்டேடியம் பூரா ஜனம் ரொம்பி இருக்கும். சச்சினும் யுவராஜும் அவுட்டே ஆக மாட்டாங்க. ஒவ்வொரு பவுண்டரிக்கும் மொத்த கூட்டமும் எந்திரிச்சு பேய்மழ பெய்ற மாதிரி ஓஓஓனு கத்தும்.

போலிங்ல கவனம் செலுத்துறது கஷ்டம். கேச் பிடிச்சாலும் பந்து கைல நிக்காது. அவ்ளோ கூச்சல். வெயில் சூடு ஒரு பக்கம் மண்டய பொளக்குதுனா இவங்க அட்டகாசம் மென்டலா நம்மள வத்த வச்சிரும்.

உள்சூடும் வெளி சூடும் தாங்காம உடம்பே மெலிஞ்சுரும். ஆமா. இந்தியா போனாலே நாம ஒல்லி ஆய்ருவோம். நோயாளி மாதிரி செம ஒல்லி. மனசு சரி இருக்காது, வயிறு நல்லா இருக்காது, வயித்தால போகும். வேற எப்டி இருக்கும்.

An extract from Chris Gayl's Six Machine

இதெல்லாம் அப்போ.
எப்போனு கேட்டா..
ஐபிஎல் வர்றதுக்கு முன்னாடி.

இந்தியன் ப்ரீமியர் லீக் வந்தாலும் வந்துது, எல்லாமே தலைகீழா மாறி போச்சு. கிரிக்கெட்டே உல்டா ஆயிருச்சு. ஐபிஎல்லுல சேந்த கிரிக்கெட்டர்ஸ் எல்லாரோட வாழ்கையும் அடியோட மாறிடுச்சு.

கதவுகள்லாம் தொறந்துது. பணம், பரிசு, புகழ் எல்லம் தேடி வந்து காலடில குவிஞ்சுது. சில பேருக்கு ஒன் மில்லியன் டாலர் சம்பளம் கெடச்சுதுனா நம்புவியா. அதுவும் ஒரே ஒரு மாசம் வந்து ஆடிட்டு போக. அய்ய்யோ.. எங்க எல்லாரோட வாழ்க்கையும் மொத்தமா மாறிடுச்சுனு சொன்னா அது பெரிய அண்டர் ஸ்டேட்மென்ட், மச்சி.
நெஜமாவே ஐபிஎல் ரொம்ப ரொம்ம்ப பெருசு. கிரிக்கெட் உலகமே அதுவரைக்கும் பாக்காத ஒரு மிகப்பெரிய விஷயம். ஏகப்பட்ட டீம்ஸ். எல்லா டீம் ஓனரும் இந்தியாவுலயே பெரிய ஆளுங்க. பெரும் பணக்காரனுங்க. உலகத்துலயே பெஸ்ட் ப்ளேயர் எனக்கு வேணும்டானு ஆக்‌ஷன்ல மோதிகிட்டாங்க. நீ மட்டும் ஒரு ஸ்டார் ப்ளேயரா இருந்தேனு வச்சிக்கோயேன், கபால்னு ஏலத்துல எடுத்துருவாங்க. என்ன விலைனாலும் பரவால்ல. அப்பால நீ ஒரு பாலிவுட் ஹீரோதான், போ. ராயல் ட்ரீட்மென்ட்.

அடேங்கப்பா. இவ்ளோ பேரு, புகழ், மரியாதலாம் கிடைக்குதுனா விட்ற முடியுமா? நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கைய காப்பத்தணுமேனு நாமளும் உசுர குடுத்து ஆடுவோம். ஒவ்வொரு மேச்லயும் அள்ளிட்டு போக பரிசுகள் குவிஞ்சு கிடக்கு.
ஆமாடா, இது பழைய இந்தியா இல்ல. அதே சத்தம், அதே சூடு, புழுதி எல்லாம் இருக்கு. ஆனா எல்லாத்துக்கும் மேல உழைப்புக்கும் திறமைக்கும் பெரிய பரிசு காத்திருக்கு. ஸ்டேடியம்லாம் அதே மாதிரி ரொம்புது. ஆனா வித விதமான கலர்கள், கொடிகள், முகங்கள்னு ஒரே வெரைட்டியா இருக்கு. ஜனங்க அதே மாதிரி கூச்சல் போட்டு ஒலி அலைய கிளப்புறாங்க, ஆனா அந்த அலை மேல நீதான் பயணிக்கிற. ஆமா, அந்த அலைல நாம மிதக்குறோம்.

அந்த அலைகள் நம்மள எங்கேலாம் கூட்டிகிட்டு போகுது தெரியுமா. சொன்னா நீ நம்ப மாட்ட. சுருக்கமா சொல்லனும்னா அது ஒரு புது உலகம். இதுவரைக்கும் நாம யாருமே பாக்காத, கேள்விப்படாத, இப்டி ஒண்ணு இருக்கானுகூட தெரியாத புத்தம்புது உலகம்...
நா ஆட்றது ராயல் சேலஞ்சர்ஸ், பேங்களூர் டீமுக்கு. ஒரு தடவ நடுவுல 5 நாள் ப்ரேக் கெடச்சுது. என்ன செய்றது. டீம் மேட்ஸ் சிலரோட தண்ணி அடிச்சுகிட்டு இருந்தேன். ஏபி டீ வில்லியர்ஸ், டேன் வெட்டோரி, யுவராஜ் எல்லாரும் இருந்தாங்க.

டீம் மேனேஜர் ஜார்ஜ் அவினாஷ் வந்தாரு. 'ஏம்பா, பொழுது போகாம போரடிக்குதா. கோவா கேள்வி பட்ருக்கீங்களாடா. அங்க நம்ம பாஸ் சொந்தமா ஒரு இடம் வச்சிருக்கார். கிங்ஃபிஷர் வில்லா னு பேராம். அங்க வேணா போய் தங்கிட்டு வாங்களேன்பா னு எங்கிட்ட சொன்னாரு. என்னா சொல்ற க்ரிஸ்'.
ஒவ்வொருத்தரயா கேட்டேன். 'என்ன, போலாமா'.

எல்லாரும் தலையாட்னாங்க. ஆனா இப்ப வேணாமே, காலைல சொல்லட்டுமானு கேட்டாங்க. போத. சரினு விட்டுட்டேன்.

காலைல எல்லாரையும் எழுப்பினேன். 'டைமாச்சு, கிளம்புவமா'.
லெப்ட் ரைட்டா தலய அசச்சானுங்க. வரலயாம்.
என்னாச்சு. ஹேங்கோவரா இருக்கலாம்.

ஜார்ஜ் போன் அடிச்சார். 'என்னா பிக் மேன். பாஸ் மறுபடி விசாரிச்சார்பா. செம ஸ்பாட்டாம். போய்தான் பாருங்களேன்றார். அவருக்கு என்ன சொல்ல'.
பாஸ் மகா ரசிகன். சொன்னா எதனா இருக்கும். நாமளாவது போய் பாத்தா என்னா.
கிளம்பிட்டேன். தனியா. ஃப்ளைட் அனுப்பிச்சாரு. ஏறி உக்காந்தேன். போய் எறங்கினேன். ஸ்வீட்டா ஒரு கார் வழுக்கிட்டு வந்து பிக்கப் பண்ணுச்சு. கேண்டலிம் போனோம். ஏதோ ஒரு ஆர்ச்சுக்குள்ள திரும்பி போய் நின்னுது. இறங்கினேன். அடடா. அடடா. என்னா சொல்றது.

நா பாத்த எத்தனையோ ஸ்டார் ஓட்டல விட கிங்ஃபிஷர் வில்லா பெருஸ்சா இருந்துது. அவ்ளோ பெரிய மாளிகை பாத்ததே இல்ல. உள்ள காலடி வச்சதும் அப்டியே நின்னுட்டேன். வெறிச்சு பாத்தா நல்லா இருக்காதுனு மனசு சொல்லுது. ஆனா முடியல. பிரமிச்சு போய் பாத்தேன்.

டேய், இது ஜேம்ஸ்பாண்ட் படத்துல வருமே, அந்த மாளிகை. அரண்மனை மாதிரி. ப்ளேபாய் மேன்ஷன். கான்கிரீட்டும் கண்ணாடியும் இழைச்சு கட்டின சொர்க்க லோகம். மனசுக்குள்ள பட்சி சொல்லுச்சு: க்ரிஸ், சரியான எடத்துக்குதாண்டா வந்திருக்க. என்ஜாய்.

பிரமாண்டமான அந்த மாட மாளிகை மொத்தமும் எனக்காகவாம். அய்ய்யோ.
வாங்க, ஒரு டூர் போலாம்னு வில்லாவை சுத்தி காட்ட ஒருத்தர் வந்தார். எந்த பக்கம் போனாலும் என் கூட ரெண்டு பட்லர் வந்தாங்க. ராஜாவுக்கு ரெண்டு பக்கமும் சேவகர்கள் வருவாங்கள, கதைல. அது மாதிரி. எனக்கே எனக்கா.

முதல் நீச்சல் குளத்துல குதிச்சேன். நீந்தினேன். விளையாடினேன். மிதந்தேன். உல்லாசம் அதுதான். அடுத்து கொஞ்ச நேரத்துல இரண்டாவது நீச்சல் குளத்துல பாஞ்சேன். ஒரு அங்கிய போத்திகிட்டு புல்வெளியில நடந்தேன். கைல ஒரு கிங்ஃபிஷர் பீரோட திரும்ப குளத்துக்கு போனேன். தண்ணிய விட்டு வெளிய வர மனசே இல்ல.
அதனால என்ன, ஒரு பாட்டில் காலியான அடுத்த செகண்ட் இன்னொரு பாட்டில் சில்லுனு கைல குடுத்தாங்க. எவ்ளோ வேணா குடிடானு சேலஞ்ச் மாதிரி. ஆமா, கிங்ஃபிஷர் வில்லாவுல கிங்ஃபிஷர் தீந்து போகுமா, என்ன.
கோல்ஃப் வண்டில ஏறி உக்காந்து ஒரு ரவுண்ட் போனேன். குக் வந்தார். என்ன சாப்ப்டுறீங்க.

என்ன கிடைக்கும் இங்க. மெனுவ காட்டுங்க.
சிரித்தார். நீங்கதான் சார் மெனு. நீங்க என்ன கேட்டாலும் செஞ்சு தருவோம்.
வாரேவா. இது வேற உலகம்டா க்ரிஸ். மல்லயா சாதாரண பாஸ் இல்ல. நமக்கு மட்டும் இல்ல, இந்த உலகத்துக்கே பாஸ். வேர்ல்ட் பாஸ். யுனிவர்ஸ் பாஸ். எப்டி வேணா சொல்லலாம்.

நம்பர் 1சி, ஜேம்ஸ் ரோட், ரோலிங்டன் டவுன்ல தகர குடிசைல பொறந்து வளந்த பையனுக்கு இந்த மாதிரிலாம் உலகம் இருக்குறதே தெரியாது. அவனோட உலகம் ஒரு கிளாஸ் பால், ஒரு நியூட்ரிபன் அவ்வளவுதான். ஆனா, அந்த பாலும் நியூட்ரிபன்னும் கேட்டாகூட இவங்க அஞ்சு நிமிசத்துல கொண்டாந்து தருவாங்க. இந்த உலகத்துல கிடைகாதது எதுவுமே இருக்காது.

வில்லா உள்ளயே சினிமா தியேட்டர் இருக்கு. தனியா ஹாயா உக்காந்து ரசிக்கலாம். தனியாதான்னு இல்ல.

கராஜ் அவ்ளோ பெருசு. ஏகப்பட்ட கார்கள். பளபளனு மின்னுது. ஒரு பிரமாண்டமான மெர்சிடிஸ் பென்ஸ். என்ன மாடல்னே கண்டுபிடிக்க முடியல, அவ்ளோ பெருசு. ஆனா கார்கள் என் கவனத்த ஈர்க்கல.

பெரிய்ய பைக் ஒண்ணு நின்னுது. முணு வீல். ஹார்லி டேவிட்சன். இது என்னானு கேட்டப்ப அந்த கதய சொன்னாங்க.

பாஸ் (விஜய் மல்லயா) அமெரிக்கால கார்ல போய்ட்டு இருந்தாரு. அப்ப ஒருத்தன் இந்த பைக்ல போய்ட்டு இருந்தான். அவன நிப்பாட்டி, பிரதர் நா எவ்ளோ காசு குடுத்தா இந்த பைக்க எனக்கு தருவ அப்டீனு பாஸ் கேட்ருக்கார். அந்தாளு அசத்தலா ஒரு பெரிய அமவுன்ட சொல்லிருக்கான். எங்க வாங்க போறார்னு நினைச்சிருப்பான். பாஸ் பத்தி தெரியாதுல்ல. ஸ்பாட்லயே டாலர்களை எண்ணி கைல குடுத்து பைக்க தூக்கிட்டு வந்துட்டாரு. அமெரிக்கால பொறந்த வண்டி கோவால குடியேறுச்சு.
ஏறி உக்காந்தேன் பைக் மேல. டெர்மினேட்டர்ல அர்னால்டு உக்காந்த மாதிரி ஸ்டைலா இருந்துருக்கும். அதுக்கு முன்னாடி சாதா பைக்கே நா ஓட்டினது இல்ல. 3 வீல் பைக் பாத்ததே இல்ல. ஆனா பட்லர் அழகா சொல்லி குடுத்தாரு. ஸ்டார்ட் பண்ணி எடுத்தேன்.

ப்ர்ர்ர்ர்ர்ரூம்!

ஆத்தி. என்னா ஸ்பீடு. சட்டைல பட்டன் போடல. தலைல ஹெல்மட் இல்ல. சன் கிளாஸ் மூக்குக்கு கீழே எறங்கிருக்கு. இந்த மாதிரி வண்டிய இப்டி ஓட்ட யாராவது விடுவானா. என்னய விட்டாங்க. ஏன்னா அன்னிக்கு நாந்தான் கிங்கு. கிங்ஃபிஷர் வில்லாவுக்கே கிங்கு.

சர், மெயின் ரோட்ல ஓட்றீங்களானு பட்லர் கேட்டார்.

நோ வே. உங்க பாஸ் மாளிகைக்குள்ள ரேஸ் டிராக்காட்டம் செமயா ரோடு போட்டு வச்சிருக்கும்போது வெளில எதுக்கு போகனும்னு சொல்லிட்டு ரெண்டு ரவுண்ட் ஓட்டினேன். செம்ம கிக்கு.

ஒரு ரம்மும் கோக்கும் குடுங்களேன்.

சொல்லி முடிக்கிறதுக்குள்ள நீட்டினாங்க. உறிஞ்சிகிட்டே தியேட்டருக்கு போனேன்.
என்ன படம் பாக்கலாம்?

அது உங்க இஷ்டம். எந்த படம் வேணாலும் பாக்க முடியும்.

பட்லர்கள் டயர்டாகவே இல்ல. ஒரு ரவுண்ட் முடிந்தால் அடுத்த நிமிடம் கிளாஸ் ஃபுல். எனக்கே தெரியாது, எப்போ நிரப்பினாங்கனு.

காலைல கண் முழிக்கும்போது எதாவது வேணுமானு பக்கத்துல வருவார் பட்லர்.
எனக்கே சொல்ல தெரியலயே, எனக்கு என்ன வேணும்னு.

வேணா யானை மேல ஒரு சவாரி போய்ட்டு வரீங்களா.
குபுக். என்னாது, உங்க பாஸ் யானையும் வச்சிருக்காரா?

நம்ம பாஸ். சொந்தமா வச்சுக்கல. அவரோட ஃபிரண்ட் இங்கவச்சிருக்கார்.
அப்றமென்னா, ஆன மேலயும் உக்காந்து ஒரு ரவுண்டு போனேன். ஹார்லி அளவுக்கு ஸ்பீடு கெடயாது. ஆனா அதுல போறப்ப இருந்த மாதிரியே அங்கயும் இங்கயுமா ஒரு ஆட்டம்.

நாலு நாளாகியும் போறதுக்கு மனசே வரல. என்ன உலகம், என்ன வாழ்க்கை.
மறுநாள் மேச் இருக்கே.

திரும்பி வந்ததும் டீம் மேட்ஸ்கிட்ட சொன்னேன் எல்லாத்தயும். கண்ண சிமிட்டாம கேட்டாங்க.

ரியாக்‌ஷன் ஒரே மாதிரி இருந்துச்சு: வட போச்சே!

English summary
Kathir's extract from Chris Gail's latest book Six Machine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X