பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை.. போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து, தமிழக - கேரளா எல்லையில் உள்ள அணைக்கட்டி என்ற இடத்தில் போராட்ட ம் நடத்தி பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டார்.

கேரளாவை கண்டித்து அன்புமணி இன்று பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில், நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

Anbumani Ramadoss arrested while doing protest against Kerala

இதன்பிறகு, தொடர்ந்து போலீசாரின் தடையை மீறி ஆதரவாளர்களுடன் அன்புமணி கேரளாவிற்குள் பேரணியாக செல்ல முயன்றார். இதனையடுத்து அன்புமணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Anbumani Ramadoss arrested while doing protest against Kerala

இந்த கைது நடவடிக்கையை, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டில்,

"பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு மூன்றாவது தடுப்பணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்திய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது" என கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK MP Anbumani Ramadoss has been arrested while doing protest in TN-KL border against Kerala's plan to build dam across Bhavani river.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற