For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதை விடுத்து ஊழலுக்கு முடிவு கட்டுங்கள்: அன்புமணி வலியுறுத்தல்

அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதை விடுத்து, போக்குவரத்து கழகங்களில் நிலவும் ஊழலுக்கு முடிவு கட்டி, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பைத் தடுக்கும் நோக்குடன் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 360 பஸ்கள் உட்பட தமிழகம் முழுவதும் 3,300 அரசு பஸ்களை நிறுத்த போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

Anbumani Ramadoss statement about State Transport Corporation

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயங்கவைக்க ஏராளமான வழிகள் உள்ளன. பஸ்கள் மூலம் சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்குவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் வருவாய் ஈட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் வருவாய் ஈட்டுகின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசூலிக்கும் அதே கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பஸ்கள் நல்ல லாபத்தில் இயங்கும்போது, அரசுப் பஸ்கள் மட்டும் இழப்பில் இயங்கினால் அதற்கு காரணம் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலும், நிர்வாகக் குறைபாடுகளும் தான் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அதற்கேற்ற வகையில் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவதன் மூலம் தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க முடியும்.

மாறாக, அரசு பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதைப் பார்க்கும்போது, அரசு பஸ்கள் நிறுத்தப்பட்ட வழித்தடங்களை எல்லாம் தனியாருக்கு தாரைவார்க்க தீர்மானித்து அதற்காகத் தான் இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருந்தால், பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பதை விடுத்து, போக்குவரத்து கழகங்களில் நிலவும் ஊழலுக்கு முடிவு கட்டி, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Pmk younth wing leader Anbumani Ramadoss statement about State Transport Corporation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X