For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணாவின் பேத்தியை கட்சிக்குள் இழுத்தது பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி சமீபத்தில் திமுகவில் போய்ச் சேர்ந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் பேத்தி சரிதாவை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. தனது கணவர் சிவக்குமாருடன் பாஜகவில் இணைந்துள்ளார் சரிதா.

காமராஜரின் பேத்தி முறை வரும் மயூரி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அதற்கு முன்பு அவர் பாஜகவில் இருந்தார். இந்த நிலையில் திமுகவின் நிறுவனரான அண்ணாவின் பேத்தி முறை வரும் சரிதா சிவக்குமார், தனது கணவருடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

Anna's grand daughter joins BJP

அண்ணாவின் தத்துப் பிள்ளையான கவுதமனின் ஒரே மகள்தான் சரிதா. இதுவரை அரசியல் பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருந்த சரிதா தற்போது தனது கணவருடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களுக்கு இயற்கையாக அரசியல் ஆர்வம் உண்டு. தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போது நாங்கள் அரசியலில் நுழைவதற்கான நேரம் இது என்று எண்ணி வந்திருக்கிறோம். மோடியின் வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்துள்ளோம்.

அண்ணா, காமராஜரை மிகவும் மதித்தார். ஆனால் காமராஜர் இருந்த காங்கிரஸ் கட்சி, இந்தி ஆதரவு கொள்கையை கொண்டு இருந்தது. எனவே தான் அண்ணா, காங்கிரசை கடுமையாக எதிர்த்து தமிழகத்தில் திமு.க.வை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் தற்போது திமுக இதே காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

அண்ணா வளர்ச்சியான தமிழகம், ஊழல் இல்லாத தமிழகத்தை விரும்பினார். அதனை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு. மேலும் அப்போது அண்ணாவின் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு இருந்தது. அதேபோல் இன்று, மோடியின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் ஆதரிக்கின்றனர். அன்றைய சூழ்நிலை வேறு. இன்றைய சூழ்நிலை வேறு. மக்கள் விரும்புவது ஊழலற்ற, வளர்ச்சியான ஆட்சியை தான்.

தமிழுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் தான் அண்ணா கட்சி தொடங்கினார். ஆனால் இன்று அந்த கட்சியில் குடும்ப அரசியலும், ஊழலும் தான் உள்ளது. இதனால் மக்கள் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நான் பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன். மேலும் அண்ணா குடும்ப அரசியலை ஊக்குவித்து இருந்தால், இன்று எங்கள் குடும்பம் இப்படி இருந்திருக்க மாட்டோம் என்றார் சரிதா.

சரிதா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இருப்பினும் தான் நிற்க வாய்ப்பில்லை என்றும் தனது கணவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சரிதா கூறியுள்ளார்.

சரிதா அல்லது அவரது கணவர் ஆகியோரில் ஒருவர் காஞ்சிபுரத்தில் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
DMK founder Anna's grand daughter Saritha has joined the BJP with her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X