For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்ச் முதல் வாரம் துவங்கும் பிளஸ் 2 தேர்வு- விடைத்தாள்கள் இணைக்கும் பணி துவக்கம்

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் முதல் வாரம் தொடங்குகிறது. இதற்கான விடைத்தாள்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இணைத்து அனுப்பி வைக்கப்படும் பணி தொடங்கியது.

விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படங்கள், விபரங்கள் அடங்கிய முகப்புதாள் மற்றும் முதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் விடைத்தாள்கள் இணைக்கும் பணி துவங்கியுள்ளது. இதன்படி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் அனுபவம் மிக்க தையல்காரர்களை கொண்டு இந்த பணிகள் நடந்து வருகிறது.

Answer sheet stiching starts in TN

தமிழ், ஆங்கிலம் தேர்வுக்கு மட்டும் 30 பக்கம் கொண்ட கோடிட்டதேர்வு தாள்கள் வழங்கப்படும். விலங்கியல், தாவரவியல் பாடத்திற்கு தலா 22 பக்கமும், கணக்கு பதிவியலுக்கு 14 பக்கம் கோடிடப்படாத தாள், மற்றும் 15 முதல் 46 பக்கம்கொண்ட அக்கவுண்ட் தாளும், பிற தேர்வுகளுக்கு தலா 38 பக்கம் கொண்டதாக விடைத்தாள் வழங்கப்படுகிறது.

வரலாறுக்கான விடைத்தாளின் நடுவில் உலக வரைபடமும், கணித தேர்வுக்கு கிராப் பேப்பரும் இணைத்து நூல் கொண்டு தைக்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் சிறிய மதிப்பெண் கேள்விகளில் எழுத்து பிழைக்கு ஏற்ப அரை மதிப்பெண் வழங்கப்படும். இதனால் சில நேரங்களில் தவறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க இந்த ஆண்டு முதன்மை விடைத்தாள்களில் அரை மதிப்பெண் வழங்க புள்ளி வைத்த கட்டம் தனியாக அச்சிடப்பட்டுள்ளது.

English summary
Plus 2 examination answer sheet works starts in Tamil nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X