For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன இருந்தாலும் 'அந்த' குரல் போல இனி வருமா?

பள்ளியில் தானியங்கி வருகை பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான தானியங்கி வருகை பதிவேடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பதிவேட்டை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.

ஸ்கூலுக்கு போகணும் என்றாலே வராத வயிற்று வலி எல்லாம் பிள்ளைகளுக்கு வந்துவிடும். சில ஆண் பிள்ளைகள் ஸ்கூலுக்கு போறேன்னு சொல்லிட்டு கட் அடித்துவிட்டு, ஊர் சுற்றி மாட்டிக் கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. இதுக்கெல்லாம் ஒரு ஆப்பு வந்துவிட்டது. பிள்ளைகள் ஸ்கூலுக்கு வருகிறார்களா இல்லையா என்பது பற்றி பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியும் வந்திருக்கிறது.

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

அதேபோல் ஸ்கூல் முடிந்தபிறகு வீட்டிக்கு கிளம்பிவிட்டார்கள் எனப்தும் பெற்றோரு மெசேஜ் வந்துவிடும். போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முதல்கட்டமாக இந்த வசதி நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சோதனை முயற்சியாக தொடங்கி இருப்பதாகவும், 15 நாட்களுக்கு இந்த முறை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு பிறகு விரிவுபடுத்தப்படும் என்றும் சொன்னார்.

பெற்றோர்கள் நிம்மதி

பெற்றோர்கள் நிம்மதி

மாணவர்களின் ஸ்கூல் அடையாள அட்டையில் இதற்கான சிப் பொருத்தப்பட்டு இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த அதி நவீன வசதி... பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். பிள்ளைகளை பற்றிய பயம், பதட்டம் அவர்களுக்கு இனி எழ வாய்ப்பிருக்காது.

யெஸ் சார்.. ப்ரசன்ட் மேம்

யெஸ் சார்.. ப்ரசன்ட் மேம்

அதேபோல, யெஸ்.சார்... யெஸ்.மேம்... ப்ரசன்ட் சார்... ப்ரசன்ட் மேம்... என்று மாற தொடங்கிவிட்டது. நாளடைவில் இதுகூட இப்போது இல்லாமல் போகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக பள்ளிகளில் ஆட்டோமேடிக் அட்டண்டன்ஸ் அதாவது தானியங்கி வருகைப் பதிவு வசதி கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு ஸ்கூலில் இப்படியெல்லாம் ப்ரசன்ட் சொல்லக்கூடாது, பெயரை சொல்லி கூப்பிட்டால் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காகத்தான் இப்படி சொல்லப்பட்டது.

உள்ளேன் ஐயா

உள்ளேன் ஐயா

என்னதான் இருந்தாலும் யெஸ் சார், ப்ரசன்ட் சார் என்று மாணவர்கள் சொன்னாலும்... ஒருகாலத்தில், தன் பெயரை எப்போது கூப்பிடுவார் கூப்பிடுவார் என்று ஆர்வத்துடன் ஆசிரியரையே உற்று நோக்கிவிட்டு, பின்னர் தன் பெயர் கூப்பிட உடனேயே வந்தபிறகு பூரிப்புடனும், மகிழ்ச்சி துள்ளலுடனும் எழுந்து "உள்ளேன் ஐயா" என்று சொன்ன அந்த மாணவனின் குரல் இனி கேட்குமா... அந்த இனிமைதான் நமக்கு இனி வருமா????

English summary
Automatic attendance for students in government secondary: Minister Senkottian
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X