கள்ளக்குறிச்சி வன்முறை: 4 குரூப்.. சைபர் கிரைம் கையில் 1647 பேர்.. ஆரம்ப புள்ளியை நெருங்கும் போலீஸ்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணமான போராட்டம் வாட்ஸ் அப் குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில், 1,647 பேரின் மொபைல் எண்கள் சைபர் கிரைமின் சந்தேக வளையத்திற்குள் வந்துள்ளன.
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் திடீரென 500க்கும் மேற்பட்டோர் குவிந்து அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி கலவரம் வாட்ஸ்அப் வாயிலாக திட்டமிடப்பட்டதாக உளவுத்துறை கண்டறிந்ததைத் தொடர்ந்து, வாட்ஸ்-அப் குழுக்களை கண்காணிக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த மாணவி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதியில் 3வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

கள்ளக்குறிச்சி வன்முறை
மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு கடந்த ஞாயிறன்று நடந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்க தொடங்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின.

எப்படி ஒருங்கிணைக்கப்பட்டது?
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறைக்கு, போலீசார் எதிர்பாராத வகையில் அதிகமான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் அங்கு திரண்டதே காரணம் எனத் தெரியவந்தது. வாட்ஸ்அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டதாக உளவுத்துறை தகவலின் பேரில் போலீஸ் நடத்திய விசாரணையில் தகவல் வெளியானது. மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கி அதன் மூலம் ஒருங்கிணைந்து போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் மூலம் வன்முறை
இறந்த பள்ளி மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் குழுக்களின் முகப்புப் பக்கமாக வைத்து, அந்தக் குழுக்களில் தவறான தகவல்களைப் பரப்பி, பலரையும் வன்முறைக்குத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் டீம்
மேலும், வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிய சைபர் கிரைம் எஸ்.பி சண்முகப்பிரியா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான சமூக வலைதள பதிவுகள், வாட்ஸ்அப் குரூப்புகள், அந்த குரூப்புகளில் இருப்பவர்களின் செல்போன் எண்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் பதிவிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் அட்மின்
தொடர்ந்து, போராட்டத்திற்கு இளைஞர்களை ஒன்றிணைத்த வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பியவர்கள் என பலரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 4 வாட்ஸ்அப் குரூப்களை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Recommended Video

1,647 பேர்
மாணவி பெயருடன் நீதி வேண்டும் என தலைப்பு வைக்கப்பட்ட இரண்டு வாட்ஸ் அப் குழுக்களில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், ஹியுமானிட்டி என்ற குரூப்பில் இருந்த 371 பேர் என 4 வாட்ஸ்அப் குரூப்களில் இருந்த 1,647 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர். இதில் கலவரத்தில் பங்கேற்ற நபர்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications