For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரத் பந்த்: நாளை தமிழகத்திலும் கடைகள் அடைக்கப்படும்... !

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை நடக்கும் போராட்டம் காரணமாக தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை நடக்கும் போராட்டம் காரணமாக தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு மக்களும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.86காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 88.50 ரூபாய்க்கு விற்கிறது.

தமிழக கட்சிகள்

தமிழக கட்சிகள்

காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்திற்கு தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.க, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.டி.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஆதரவு தருகிறது. பாமக வெளியில் இருந்து ஆதரிக்கிறது.

கடைகளின் நிலை

கடைகளின் நிலை

இதனால் தமிழ்நாட்டில் நாளை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எதற்கு

எதற்கு

நாளை ஆம்புலன்ஸ், மருத்துவமனை இயங்கும். அதேபோல் போல் பால், மருந்து ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். பேருந்துகள் இயங்குமா, இயங்காதா என்பது குறித்து இன்னும் விரிவான அறிவிப்பு வெளியாகவில்லை .

பெரிய ஆதரவு

பெரிய ஆதரவு

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆட்டோ சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்காது. அதேபோல் லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல் சில மாநிலங்களில் மீனவ சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

முதல்வர் திட்டம்

முதல்வர் திட்டம்

இதனால் சில பெட்ரோல் பங்குகள் மூடப்படும். ஆனால் சில பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க்ப்பட்டுள்ளது. புதுச்சேரியில் போராட்டத்தை சிறப்பாக நடத்த முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்.

English summary
Bharath Bandh against Petrol/ Diesel Price hike, There will be the same scenario in Tamilnadu like rest of India. No shops will not remain open tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X