ஐ.டி ரெய்டுக்கு சசிகலாவின் மிடாஸ் மதுபான ஆலையும் தப்பவில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா மற்றும் தினகரன் அவர்களின் உறவினர்களின் வீட்டில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருகிறது.

சசிகலா குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் குறிவைத்து இன்று காலை முதல் 190க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன், திவாகரன், இளவரசி, விவேக் ஜெயராமன் என மன்னார்குடி குடும்பத்தின் முக்கிய புள்ளிகளின் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.

Biggest IT Raid in Sasikala's Family And also officials Raid in Midas distilleries

ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமா அலுவலகம், தினகரன் வீடு, போயஸ் கார்டன் வீடு மற்றும் அவர்களின் தொடர்புடைய முக்கிய தொழிற்சாலைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் எத்தனை அதிகாரிகள் பங்கு பெற்று இருக்கிறார்கள், என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்கிற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்த ஆலை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இங்கிருந்து அதிக அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT Offcials Raid in Midas Distilleries in Padapai Kanchipuram District. Which is owned by Sasikala.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற