விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்காத பாஜக, அதிமுகவிற்கு அழைப்பில்லை... மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக விவசாயிகளின் பிரச்சனை குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதை சுட்டிக்காட்டி இந்த கூட்டத்திற்கு திமுக கூட்டியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனை விவசாதிக்கப்பட உள்ளது.

அழைப்பில்லை

அழைப்பில்லை

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பாஜகவையும், அதிமுக அம்மா கட்சி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினார்.

தீர்க்க வழி

தீர்க்க வழி

மேலும், பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய பாஜகவும் அதிமுகவும் விவசாயிகளின் பிரச்சனைகளை போக்காமல் காலம் கடத்தி வருவதால் அவர்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பங்கேற்பு

பங்கேற்பு

இந்தக் கூட்டத்திற்க ஸ்டாலின் அழைத்த விடுப்பை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வாக்குறுதி

வாக்குறுதி

முன்னதாக, டெல்லியில் அய்யாகண்ணு தலைமையில் நடைபெறும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார் ஸ்டாலின். அதன்படி இந்தக் கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP, ADMK are not invited to all party meeting, said the opposion leader M K Stalin.
Please Wait while comments are loading...