அதிமுக உடைந்ததற்கு மத்திய அரசும் பாஜகவும்தான் காரணம்.. திருநாவுக்கரசர் பகீர் குற்றச்சசாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக உடைந்ததற்கு மத்திய அரசே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்குள் ஒற்றுமை குறைந்து வருவதாக அவர் கூறினார்.

BJP only Split the ADMK as 3 parts : Thirunavukarasar

கட்சிக்குள் எந்தளவுக்கு ஒற்றுமை உள்ளது என்பது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவந்தால்தான் தெரியும் என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுக உடைந்ததற்கு காரணமே மத்திய அரசு தான் என்றும் திருநாவுக்கரசர் சாடினார்.

அதிமுக பெயரையும் இரட்டை இலையையும் முடக்கியதும் பாஜக தான் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பாஜக அதிமுகவை மூன்ற அணிகளாக உடைத்து விட்டது என்றும் திருநாவுக்கரசர் கூறினார். தற்போது அதிமுகவின் 2 அணிகளையும் சேர்க்க முயற்சிப்பதும் பாஜகதான் என்றுட் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu congress leader Thirunavukarasar accuses that BJP only Split the ADMK as 3 parts. He also told There in no unity in the ADMK.
Please Wait while comments are loading...