பதவியில் இருந்து அசைக்கவே முடியாத லாபி பலத்துடன் தமிழிசை.. அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழிசை சவுந்தரராஜனை யாராலும் அசைக்க முடியாது-ஏன்?- வீடியோ

  சென்னை: எவ்வளவுதான் முட்டி மோதினாலும் தலைவர் பதவியில் இருந்து அசைக்கவே முடியாத லாபி பலத்துடன் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறாரே என விரக்தியடைந்து போயுள்ளனராம் தமிழக பாஜக தலைவர்கள்.

  பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசையை மாற்றுவதற்கு டெல்லிக்கு தொடர்ந்து காவடி தூக்குகிறார்கள் பிரமுகர்கள். ஆர்கே நகர் தோல்வியை முன்வைத்து எப்படியும் தமிழிசை விக்கெட்டை வீழ்த்திவிடலாம் எனவும் கணக்குப் போட்டது காவடி கோஷ்டி.

  ஆனால் டெல்லியில் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த வாய்ச்சவடால் கோஷ்டி. மீண்டும் தமிழக தலைவராக துடிக்கும் சீனியர் தலைவர் கூட டெல்லியிலேயே முகாமிட்டு காய்களை நகர்த்திப் பார்த்தார். 

  விரக்தியில் காவடி கோஷ்டி

  விரக்தியில் காவடி கோஷ்டி

  என்னங்க நீங்களுமா இப்படி என அவரையும் கடிந்து கொண்டதாம் டெல்லி. தமிழிசையை தலைவர் பதவியில் இருந்து அசைக்கவே முடியாது போல என விரக்தியில் இருக்கிறது இக்காவடி அணி.

  தமிழக பிரமுகர் ஆதரவு

  தமிழக பிரமுகர் ஆதரவு

  ஏனெனில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் குட்புக்கில் இருக்கிற டீமில் உள்ள தமிழக பிரமுகர்தான் தமிழிசைக்கு முழு ஆதரவு தந்து கொண்டிருக்கிறாராம். அத்துடன் மத்திய அரசு அண்மையில் கொடுத்த பணியின் மூலமாக தமிழிசைக்கு நிறைய அசைன்மெண்ட்டுகளை கொடுத்திருக்கிறதாம் டெல்லி. இப்போதைய நிலையில் தமிழிசையே பதவி வேண்டாம் என்றாலும் டெல்லி விடுவதாக இல்லையாம்.

  தவிர்க்கும் தமிழிசை

  தவிர்க்கும் தமிழிசை

  இதை நன்றாக தெரிந்து வைத்துள்ள தமிழிசையின் அடிப்பொடிகள், போட்டியாக குடைச்சல் கொடுத்து வருபவர் மீதான புகார்களை விசாரித்து நீங்களே நடவடிக்கை எடுங்கள் என நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் எதுக்கு செய்து கொண்டு... அவங்க பேமெண்ட் விஷயம் முழுமையாக டெல்லிக்கு தெரியும். அவங்க சொன்னா நடவடிக்கை எடுக்கலாம் என கண்டு கொள்ளாமல் கடந்து போனாராம் தமிழிசை.

  அசால்ட் தமிழிசை

  அசால்ட் தமிழிசை

  அதிகாரம் உங்களிடம் இருக்கும் போதே அதிருப்தியாளர்களை நீக்கிடுங்க.. இன்னசென்ட்டாக இருந்தால் உங்க பதவியை அபகரித்துவிடுவார்கள் என கரிசனையோடு ஆதரவாளர்கள் ஆதங்கத்தை கொட்டுகின்றனராம். ஆனாலும் டெல்லி லாபி இருப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என அசால்ட் காட்டுகிறாராம் தமிழிசை.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP Senior leaders revolt against the State President Tamilisai Soundararajan was failed.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற