விஜய், கமல்.. பாஜக vs தமிழ் நடிகர்கள் பஞ்சாயத்து தொடருகிறது! தேசிய அளவில் விவாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும் எதிர்ப்பு!- வீடியோ

  சென்னை: இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் சொல்ல முடியாத அளவுக்கு தீவிரவாதம் பரவியுள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரைக்கு, பாஜக, சிவசேனை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  மெர்சல் திரைப்படத்தில் விஜய் பேசிய டயலாக்கிற்கும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேசம் முழுமைக்கும் அதை கொண்டு சென்றனர். இப்போது கமல் விஷயத்தால் மீண்டும் அகில இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

  கமல் வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் "எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி அவர்கள் (இந்துக்கள்) விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.." என்று குறிப்பிட்டுள்ளார்.

  பாஜக வலியுறுத்தல்

  பாஜக வலியுறுத்தல்

  இதுகுறித்து, பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "கமல்ஹாசன் இதற்காக மன்னிப்பு கேட்பதோடு தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். நிஜம் என்னவென்றால், இங்கு இந்துக்கள் பெரும்பான்மையின மக்களாக இருப்பதால்தான் அமைதி நிலவுகிறது" என்று தெரிவித்துள்ளார். இதேபோல சிவசேனை செய்தித்தொடர்பாளர் மனிஷா கயண்டேவும், "இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியலுக்கு உதவாது என்றும் இந்து தீவிரவாதம் என்று பேசியதால்தான் காங்கிரஸ் இன்று அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது" என்றும் கூறியுள்ளார்.

  தேசிய அளவில் கவனம்

  தேசிய அளவில் கவனம்

  பாஜக எதிர்ப்பு காரணமாக கமல் கட்டுரை குறித்த விவாதம் தற்போது தேசிய அளவில் எழுந்துவிட்டது. தேசிய ஊடகங்கள் இதுகுறித்த செய்தியை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். இது மெர்சல் விவகாரத்தில் விஜய் பெயர் நாடு முழுக்க பேசப்பட்டதை நினைவுபடுத்துகிறது.

  மெர்சல் விவகாரம்

  மெர்சல் விவகாரம்

  மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை விஜய் கதாப்பாத்திரம் பேசியதாக பாஜக தலைவர் தமிழிசை ஆரம்பித்து வைத்த நெருப்பு, எச்.ராஜா முதல் தேசிய ஊடகங்கள் வரை பரவியது. இதனால் நாடு முழுக்க மெர்சல் திரைப்படமும், விஜயும் ஃபேமஸ் ஆனார்கள்.

  பாஜக vs தமிழ் நடிகர்கள்

  பாஜக vs தமிழ் நடிகர்கள்

  இப்போது கமல் குறித்த விவாதங்களும் தேசிய ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து பாஜக மற்றும் தமிழ் நடிகர்கள் நடுவேயான போராக இதை ஆங்கில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மேலும், தமிழகத்திலுள்ள பாஜக எதிர்ப்பு அலையைத்தான் நடிகர்கள் பிரதிபலிப்பதாகவும் விமர்சனங்களை கூறுகிறார்கள் ஆங்கில ஊடக பங்கேற்பாளர்கள். தமிழகமும், அதன் நடிகர்களுமே தேசிய அளவில் கடந்த இரு வாரங்களாக பேசுபொருளாக மாறியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  After Tamil actor Kamal Hassan made yet another controversial statement over the phrase 'saffron terror' that the right wing cannot challenge anyone that there is no Hindu terrorism, Bharatiya Janata Party (BJP) demanded an apology on Thursday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற