திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று அந்த கோயிலின் இணை ஆணையருக்கு மிரட்டல் வந்துள்ளது.

அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு தீப திருவிழாவின்போது மலை மீது தீபம் ஏற்றுவது மிகவும் பிரபலம். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

Bomb threat for Tiruvannamalai Annamalaiyar temple

மேலும் பௌர்ணமி நாட்களின்போது கிரிவலம் வருவதும் வழக்கம். மிகவும் பாரம்பரியமான இக்கோயிலின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோயில் இணை ஆணையர் ஜெகநாதனுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் காஞ்சி சிறுத்தைகள் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை போலீஸில் ஜெகநாதன் புகார் கொடுத்தார். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Tiruvannamalai Annamalaiyar temple's EO got bomb threat from unanymous. After bomb threat, additional police forces deployed.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற