முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்கள் விவாதம் மற்றும் அமைச்சர்களின் பதிலுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

 cabinet meeting will held on today

கதிராமங்கலம் கிராம மக்கள் ஓஎன்சிஜிக்கு எதிராக போராட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து அரசின் நிலைமை, கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் நிலவி வரும் சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று கூட்டப்படவுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
cabinet meeting will held on today by chief minister edappadi palanisamy
Please Wait while comments are loading...