For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா புஷ்பாவை இயக்கும் மத்திய பாஜக அரசு? சசிகலா நடராஜனுக்கு புதுசிக்கல்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா மீதான வழக்குகள் விரைவில் வாபஸ் ஆகும் என கூறப்படுகிறது. அத்துடன் சசிகலா புஷ்பா மூலமாக சசிகலா நடராஜனுக்கு நெருக்கடி கொடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து சசிகலா நடராஜன் மீது சசிகலா புஷ்பா வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகிறார். 2011-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்தது போல மீண்டும் சசிகலா நடராஜன் உறவினர்கள் சதியில் ஈடுபடுகிறார்களோ எனவும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

சசிகலா புஷ்பாவின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. ஆனால் சசிகலா நடராஜன் தரப்போ எடப்பாடி பழனிச்சாமி வசம் ஜெயலலிதாவின் துறைகளை ஒப்படைக்க திட்டமிட்டிருந்தது.

ஓபிஎஸ் வசம் துறைகள்

ஓபிஎஸ் வசம் துறைகள்

இதை நிராகரித்த மத்திய அரசு ஆளுநர் மூலமாக அமைச்சரவையில் 2-ம் இடத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்திடம்தான் முதல்வரின் துறைகளை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. சசிகலா நடராஜன் தரப்பு இதனால் அதிர்ச்சி அடைந்தது.

டெல்லி லாபி

டெல்லி லாபி

இதனிடையே சசிகலா நடராஜன் மீது தாம் தெரிவித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி லாபி மூலம் சசிகலா புஷ்பா முயற்சித்து வருகிறாராம். மத்திய அமைச்சர்கள் சிலர் சசிகலா புஷ்பாவுக்கு முழு ஆதரவை தெரிவித்து வருவதால் விரைவில் சசிகலா நடராஜனுக்கு நெருக்கடி வரும் எனக் கூறப்படுகிறது.

தாக்குதல் காரணம் இதுதான்

தாக்குதல் காரணம் இதுதான்

அத்துடன் சசிகலா புஷ்பா மீதான வழக்குகளை வாபஸ் பெற வைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி உள்ளதாம். அவர் மீது புகார் தெரிவித்த பெண்கள் நேற்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல்நிலையத்துக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார்களாம். ஆனால் அந்த பெண்கள் வராததாலேயே அவர்களது வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திருவிளையாடல் ஆரம்பம்

திருவிளையாடல் ஆரம்பம்

சசிகலா புஷ்பாவை முன்வைத்து மத்திய அரசு தன்னுடைய திருவிளையாடல்களை தொடங்கப் போகிறது.. இதில் அகப்படப் போவது எத்தனை தலைகளோ என கண்சிமிட்டுகின்றன டெல்லி வட்டாரங்கள்.

English summary
Delhi Sources said that Centre may take action against Sasikala Natarajan very soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X