கோவிந்தா.. கோவிந்தா.. முழக்கத்துடன் நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 9வது நாளான இன்று சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்க மன்னாருக்கு பட்டு சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Chariot Festival today in Trichy Srirangam

பின்னர் இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The chariot festival in Trichy Srirangam Ranganathar temple started this morning. Thousands of people participated in it.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற