For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தம் 3 பேர்.. 2வது புருஷன்.. லட்சுமியும் உடந்தை.. சுடுகாட்டில் வைத்து.. செங்கல்பட்டில் பயங்கரம்

திருப்போரூர் ரவுடி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: ரவுடியின் கை, கால், உடம்பு என எல்லா பகுதிகளிலும் கத்தியால் குத்தப்பட்டு, அந்த சடலத்தை சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளது ஒரு கும்பல்.. தந்தையின் கல்லறையின் மேல், பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை வைத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்..

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்... இவர் ஒரு ரிடையர் ஆன போலீஸ்.

இந்த போலீஸ்கார் மகன் ஒரு ரவுடி.. பெயர் சதீஷ்குமார்.. 39 வயதாகிறது.. மறைமலை நகர், வண்டலூர், பல்லாவரம், வேளச்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம் இப்படி எல்லா ஸ்டேஷனிலும் சதீஷ் மீது கேஸ்கள் உள்ளன.. கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி, ஆள் கடத்தல் இப்படி எந்த கிரிமினல் வேலையும் சதீஷ் மிச்சம் வைக்கவில்லை.

விசாரணை

விசாரணை

இந்நிலையில், மேலையூர் கிராமப்பகுதியில் சுடுகாடு அருகே ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. போலீசார் விரைந்து சென்று பார்த்தால், அந்த பிணம் பாதி எரிந்து கிடந்தது.. பிறகு விசாரணயை மேற்கொண்டதில், அது சதீஷ்தான் என்பதும் தெரியவந்தது.

 மர்மநபர்கள்

மர்மநபர்கள்

இவருடைய அப்பாவின் சமாதிக்கு காரில் சதீஷ் சென்று கொண்டிருந்திருக்கிறார்.. அப்போது மர்மநபர்கள் இவரை வழிமறித்து கொன்றுள்ளனர்.. தலை, கழுத்து, வயிறு, கால் என மொத்த இடங்களையும் சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர்.. அதுமட்டுமல்ல, சதீஷின் சடலத்தை அவரது அப்பாவின் சமாதிக்கே இழுத்து சென்று போட்டு, அங்கேயே சடலத்தையும் எரித்துள்ளனர்.. ஆனால் அது பாதிதான் வெந்திருந்தது... பிறகு அதை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையும் ஆரம்பமானது.

லட்சுமி

லட்சுமி

சதீஷூக்கு 3 மனைவிகளாம்.. முதல்மனைவி முழுசாக பிரிந்து விட்டார்.. 2-வது மனைவி பெயர் லட்சுமி.. 3வது மனைவி முள்ளிபக்கம் கிராமத்தில் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார்.. சதீஷ் 2வது மனைவியுடன்தான் வசித்து வந்துள்ளார்.. இந்த லட்சுமியின் முதல் புருஷனை கொலை செய்தது சதீஷ்தான்.. இதற்கு லட்சுமியும் உடந்தை... இந்த வழக்கு கேளம்பாக்கம் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

 அமமுக

அமமுக

இந்த லட்சுமி மீதுதான் தற்போது போலீசாருக்கு கவனம் திரும்பி உள்ளது.. காரணம், திருந்தி வாழ்வதற்காக கடந்த வருஷம் போலீசாரிடம் சதீஷ் மனு வழங்கி இருக்கிறார்... அதற்கேற்றபடி சமீப காலமாக எந்த தவறையும் சதீஷ் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.. மேலும் சில மாதங்களுக்கு முன்பு சதீஷ், அமமுகவில் வர்த்தகப் பிரிவில் ஒரு பதவியை பெற்றார்.

பணம்

பணம்

மேலையூர் ஊராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கும் போட்டியிடப் போவதாக கூறினார். அதனால், பல்லாவரத்தில் இவரது ஒரு நிலத்தை விற்று ஒரு கோடி ரூபாய் வரை கையில் பணம் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. இந்த பணத்துக்கு ஆசைப்பட்டு லட்சுமியே சதீஷை கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், வேறு ஏதேனும் முன்பகை காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

வார்னிங்

வார்னிங்

சதீஷின் அப்பா நேர்மையான போலீஸ்காரராம்.. சதீஷ் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதால், அவருக்கு நிறைய சிக்கல் ஏற்பட்டது... இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் சந்திரனை கூப்பிட்டு வார்ன் செய்தனர்.. இதனால் மனம் நொந்த சந்திரன், "சதீஷ் தனது மகனே இல்லை, அவனை போலீசார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என எழுதி கொடுத்தார். பின்னர் சில வருஷத்துக்கு முன்பு சந்திரனும் இறந்து விட்டார்... அவர் இறந்தபிறகும் சதீஷ் திருந்தவில்லை.. அப்பாவின் கல்லறைக்கு சென்று, பல்வேறு கொலை, கொள்ளை சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பாராம் சதீஷ். கடைசியில் அவரது முடிவும் அப்பாவின் அதே கல்லறையில் நடந்துவிட்டது.

English summary
Chengalpattu rowdy murder brutally due to prejudice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X