For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: மவுலிவாக்கத்தில் நிகழ்ந்த அடுக்குமாடி கட்டிட விபத்து தொடர்பான வழக்கில், கட்டிட உரிமையாளர் உட்பட ஆறுபேர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வியாழக் கிழமை தள்ளுபடி செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பரிதாபமாக இறந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

Chennai building collapse: accused denied bail

இதையொட்டி கைது செய்யப்பட்ட அந்த கட்டிடத்தின் நிர்வாக இயக்குனர் மனோகரன் (வயது 59), இயக்குனரான மதுரையை சேர்ந்த பாலுகுருசாமி (58), மனோகரனின் மகன் முத்துகாமாட்சி (27), திருத்துறைப்பூண்டியை சேர்ந்த என்ஜினீயர் துரைசிங்கம் (22), மதுரையை சேர்ந்த என்ஜீனியர் சங்கரராமகிருஷ்ணன் (24), கடையநல்லூரை சேர்ந்த என்ஜீனியர் கார்த்தி (25), ஆகியோர் ஜாமீன் கோரி காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அய்யம்பேட்டை கே.சம்பத் ஆஜர் ஆனார். மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கடுமையாக வாதிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு ஜாமீன் அளித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ள தாக கூறி ஆறு பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

English summary
The District Sessions Judge-II here, K. Paramaraj, on Thursday dismissed the bail applications of six persons, including the managing director of a real estate company, arrested in connection with the building collapse at Moulivakkam near Chennai on June 28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X