அகலக் கால் வச்சது தப்பாப் போச்சு.. புலம்பும் நர்மதா!
சென்னை: தொழிலை விரிவுபடுத்த அகலக் கால் வைத்து விட்டேன். அதுதான் என்னை இப்படி சிக்கலில் மாட்டி விட்டது என்று புலம்பியுள்ளாராம் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து ரூ. 46 கோடி அளவுக்கு படு விவரமாக சுருட்டி கைதாகியுள்ள பெண் தொழிலதிபர் நர்மதா.
34 வயதுதான் இந்த நர்மதாவுக்கு ஆகிறது. ஆனால் இவர் செய்துள்ள காரியம் அனைவரையும் மலைக்க வைத்துள்ளது. இந்த வயதில் படு தெளிவாக திட்டமிட்டு ரூ. 46 கோடியை இவர் மோசடி செய்துள்ளது காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. இவருடன் 24 வயதான பரத்குமார் என்பவர் மட்டுமே கூட்டாளியாக இருந்துள்ளார். இருப்பினும் இவ்வளவு பெரிய மோசடி செய்துள்ள நர்மதாவுக்கு வேறு ஏதேனும் பெரிய புள்ளிகளின் சப்போர்ட் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறதாம்.

நர்மதா, கடந்த 2010 ம் ஆண்டு முதல் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் மாதச் சம்பளத்தில் வேலை செய்து வந்த அவர், பின்னர் அந்த வேலையை உதறிவிட்டு, கால் டாக்சி நிறுவனத்தை தொடங்கினார். இதில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி தரப்படும் என்றும், தங்க காசு பரிசாக வழங்கப்படும் என்றும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை நம்பி பலர் தங்களது பணத்தை லட்சம் லட்சமாக நர்மதாவிடம் கொடுத்தனர். இதனை வாங்கிக் கொண்டு சொன்னபடி நர்மதாவால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.
இப்படியாக ரூ. 46 கோடி வரை அவர் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரையும் பரத்குமாரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து போலீஸாரிடம் புலம்பினாராம் நர்மதா. வங்கியில் தான் வாங்கிய கடனுக்கு ஏராளமான கார்களை பறிமுதல் செய்து விட்டதாலும், தொழிலை விரிவுபடுத்த நினைத்து அகல கால் வைத்து விட்டதுமே எனது வீழ்ச்சிக்கு காரணம் என்று நர்மதா கூறியுள்ளார்.
34 வயதிலேயே கால் டாக்சி நிறுவன தொழிலில் கொடி கட்டி பறந்த நர்மதா, தனது நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பலருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளாராம். மீதமுள்ளவர்களுக்கும் 3 மாதத்தில் எப்படியும் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
நர்மதாவை தற்போது போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். அப்போது மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications