விடிஞ்சா தீபாவளி... தீவுத்திடலில் பட்டைய கிளப்பும் பட்டாசு விற்பனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அம்சமான பட்டாசுகளை வாங்க சென்னை தீவுத்திடலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வந்த மொத்தவிலை பட்டாசுக் கடைகளுக்கு ஹைகோர்ட் தடை விதித்ததையடுத்து. கடந்த 8 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் விற்பனை சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீவுத்திடலில் 40 க்கும மேற்பட்ட கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு முன்னரே கடைகள் இங்கு அமைக்கப்பட்டாலும் நாளை தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி மக்கள் விறுவிறுப்பாக பட்டாசு கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. புதிய ரக பட்டாசுகள், வானில் பல வண்ணங்களில் ஜொலிக்கும் வர்ணஜால பட்டாசுகள், ஃபேன்சி ரக பட்டாசுகள் விற்பனையில் வெளுத்து வாங்குகின்றன.

 இறுதிக் கட்ட விற்பனை

இறுதிக் கட்ட விற்பனை

விடியற்காலையில் கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் பட்டாசு விற்பனை இங்கு நடைபெறும். இதே போன்று நாளையும் தீபாவளிக்கு மறுநாள் வரையிலும் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 விலை எவ்வளவு?

விலை எவ்வளவு?

கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி இல்லாவிட்டாலும் பட்டாசுகளுக்கு மறைமுக வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 புதிய ரக பட்டாசுகள்

புதிய ரக பட்டாசுகள்

தீபாவளிக்கு புது ரகங்களையே அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். வழக்கமான லட்சுமி வெடி, ஊசிப்பட்டாசு போன்ற ரகங்களும் பல்வேறு மாறுதலுக்கு உள்ளாகி ஃபேன்சி ரக பட்டாசுகளாக சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இரவு நேரங்களில், வானத்தில் வர்ணஜாலம் காட்டும் ரகங்கள் ஆண்டுதோறும் புதிது, புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் 60 திய பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 விறுவிறு விற்பனை

விறுவிறு விற்பனை

மேலும் கிப்ட் பாக்ஸ் ரகங்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கிப்ட் பாக்ஸ் ரகங்கள் ரூ. 1000 முதல் ரூ.10 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் வரையிலும் கூட கிடைக்கின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People were in final phase of shopping at Chennai island grounds, and the sales here is full night planned for the benefit of people.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற