நாளை நடைபெறுவதாக இருந்த "சென்னை மாதம்" திருவிழா திடீர் ஒத்தி வைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூரில் நாளை நடைபெறுவதாக இருந்த சென்னை மாதம் திருவிழா வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அந்த விழாவை ஒருங்கிணைத்த சென்னை 2000 பிளஸ் டிரஸ்ட் தெரிவித்தது.

சென்னை 2000 பிளஸ் டிரஸ்டின் மாநில தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியக இயக்ககத்தின் சார்பில் சென்னை மாதம் என்ற திருவிழாவின் தொடக்க விழா நாளைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

Chennai maadham festival postponed

எழும்பூரில் உள்ள மியூசியம் தியேட்டரில் நடைபெறுவதாக இருந்த இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்த விழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதைச் சென்னை 2000 பிளஸ் டிரஸ்டின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Inauguration of the Chennai Maadham Festival has been postponed due to unavoidable circumstances.
Please Wait while comments are loading...