பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ் கட்டடம் இருந்த இடம் இப்போது வெறிச்... வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தி.நகரில் நெருப்புக்கு இரையான சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதால் அந்த பிரமாண்ட கட்டடம் இருந்த இடம் வெறிச்சோடி கிடக்கிறது.

சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையில் அமைந்திருந்தது சென்னை சில்க்ஸ் ஏழு மாடி கட்டடம். இந்த துணிக்கடை கடந்த மே 31ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதனால் 7 மாடிக் கட்டடமும் 30 மணிநேரத்துக்கும் மேலாக தீப்பற்றி எரிந்தது. இதனால் அக்கட்டடம் முற்றிலும் பலம் இழந்து போனது.

 Chennai silks building become a empty ground

கட்டடத்தை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி இடிக்க ஆரம்பித்தார்கள். தற்போது அங்கு கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டது.

இன்னும் இரண்டொரு தினங்களில் குவிந்திருக்கும் கற்கள் மற்றும் மண் அள்ளப்பட்டு அந்த இடம் மண் தரையாக்கப்பட்டு விடும். 7 மாடிகளைக் கொண்டு பிரம்மாண்டமாக இருந்த இடம், தற்போது வெறும் தரையாகி வெறிச்சோடி கிடைக்கிறது.

ஆனால், அனுமதி வாங்காமல் 3 மாடிகளை அதிகமாக கட்டியதும் இந்த விபத்துக்கு பெரும் காரணம் என்ற போதிலும் இதே போல் அனுமதி வாங்காமல் கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக அதிகாரிகள் எந்த நடிவடிக்கையையும் தீ விபத்துக்குப் பிறகும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Chennai T.Nagar Chennai silks building met fire accident and 7 floor building completely demolished. Now that place look like a ground and full of emptiness.
Please Wait while comments are loading...