For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை இன்று பார்வையிடுகிறார் முதல்வர் எடப்பாடியார்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிடுகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிடுகிறார்.

அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கடலில் இருந்தபடியே தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவை சூறையாடியது.

Chief Minister Edappadi Palanidami going to visit Kanniyakumari today

இதில் இருமாநிலங்களும் பலத்த சேதமடைந்தன. புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 600க்கும் மேற்பட்டோர் இதுவரை கரை திரும்பவில்லை.

இதனால் மீனவர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மீனவர்களை மீட்டுத்தரக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன.

இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிடவுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் அங்கிருந்து சாலை வழியாக கன்னியாகுமரி செல்லவுள்ளார்.

English summary
Chief Minister Edappadi Palanidami going to visit Kanniyakumari today. After Ockhi cyclone affected in the district Chief minister going to visit today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X