For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவாஜி சிலை அகற்றுவதை எதிர்த்து வழக்கு - விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி அகர்வால் மறுத்துவிட்டார்.

இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட அகர்வால், வழக்கு விசாரணயை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கில், 'போக்குவரத்தை பாதிக்கும் சிவாஜி சிலைய அகற்றலாம்' என்று தமிழக அரசு பதில் அளித்திருந்தது.

CJ refuses to take Sivaji statue petition

இந்த நிலையில், சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை தமிழ்பித்தன், சிவாஜி பாபு என்பவர்கள் 2 பொது நலன் வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கைத்தான் தலைமை நீதிபதி விசாரிக்க மறுத்தார்.

அதே நேரம், சிவாஜி குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் அரசு எடுக்கும் முடிவே சரி என்று அமைதி காக்கிறார்கள்.

English summary
The Chief Justice of Madras High Court refused to take petition against the TN govt decision of removing Sivaji statue at Marina Road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X