தீவிபத்து: தேனி, மதுரை விரைகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி காட்டுத்தீ : பலியானவர்களின் விபரம் : மதுரை விரைகிறார் முதல்வர்- வீடியோ

  சென்னை: தேனி காட்டு தீவிபத்தில் சிக்கி மீட்கப்பட்டு தேனி, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைந்துள்ளார்.

  தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர்.

  CM Edappadi start his journey to Theni and Madurai

  இவர்கள் அனைவரும் நேற்று நடந்த காட்டு தீயில் சிக்கினர். அவர்களுள் 9 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் 6 பேர் பெண்கள். 10 பேருக்கு எவ்வித காயமும் இல்லை.

  மீதமுள்ள 17 பேரில் 5 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மதுரை தனியார் மருத்துவமனையிலும், 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தேனி, மதுரை விரைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  CM Edappadi Palanisamy starts his journey to Theni and Madurai who traps in Theni forest fire incident.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற