For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசி ரயில்வே மேம்பாலம்- இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறப்பு

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசி ரயில்வே மேம்பாலத்தை இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.

தென்காசி ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தன. பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்காக கடந்த இரண்டு மாதங்களாக காத்திருந்தது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த 8ந் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 7ந் தேதி மாலை திறப்பு விழா 11ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

CM to open Tenkasi rail over-bridge today

திறப்பு விழா நடக்குமா, நடக்காத என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைநதன. பாலம் முழுவதும் வண்ண கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பாலத்தின் இருபுறமும் வாலை இலை கட்டப்பட்டிருந்தது. பாலத்தின் வடபுறம் விழாவுக்கு வரும் அதிகாரிகள் அமர்வதற்காக பந்தல் போடப்பட்டுள்ளது.

பாலம் சிரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாலத்தின் திறப்பு விழா இன்று பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் என நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தெரிவித்தார். இதனை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறப்பு வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The rail over-bridge constructed on the Tenkasi- Madurai Highway at Tenkasi will be opened by Chief Minister Jayalalithaa on today through videoconferencing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X