கோவையில் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷம் செய்த மருத்துவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil
  கோவையில் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷம் செய்த மருத்துவர்- வீடியோ

  கோவை : பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

  கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரவீந்திரன் . இவர் அப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு கொடைக்கானலைச் சேர்ந்த 17 வயது முதலாம் ஆண்டு நர்சிங் மாணவி ஒருவர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பயிற்சிக்கு வந்தார்.

   மருத்துவர் ரவீந்திரன்

  மருத்துவர் ரவீந்திரன்

  கொடைக்கானல் மாணவிக்கு சளித்தொல்லை இருந்ததால் அவர் மருத்துவர் ரவீந்திரனிடம் சிகிச்சைகாக வந்து உள்ளார். அவரைப் பரிசோதித்த டாக்டர் 2 ஊசிகளை அடுத்தடுத்து போட்டுள்ளார்.

   சில்மிஷம் செய்த மருத்துவர்

  சில்மிஷம் செய்த மருத்துவர்

  இதில் மயக்க ஊசியும் ஒன்று. இதனால் மாணவி மயக்கமடைந்ததும் மருத்துவர் ரவீந்திரன் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அரை மயக்கத்தில் இருந்த நிலையில் டாக்டரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிலையில் மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார் மாணவி.

   விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

  விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

  இதுபற்றி கோவையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து ரவீந்தரனின் மன்மத லீலைகள் குறித்து ஏராளமானோர் அதிர்ச்சி தகவல்களை கொட்டினர்.

   பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்

  பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்

  இதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் ரவீந்திரன் மீது கோவை போலீசில் புகார் தரப்பட்டது. கோவை போலீசார் ரவீந்தரனை கைது செய்து விசாரணை நடத்தினர். இன்று மருத்துவர் ரவீந்திரன் தனி நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Coimbatore Doctor filed under Child sex abuse Case. Judge Alli sentenced 15 days Judicial Remand for Doctor Ravindran who misbehaved with Nursing Girl Students.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற