பறவை மோதியதால், கோவை-சார்ஜா ஏர் அரேபியா விமானம் பழுது.. பயணிகள் அவதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: சார்ஜா செல்லவிருந்த ஏர் அரேபியா விமானத்தில் பறவை மோதியதால் விமானம் பழுதாகி பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவையிலிருந்து இன்று காலை சார்ஜாவுக்கு, ஏர் அரேபியா விமானம் கிளம்ப வேண்டியிருந்தது. ஆனால், சார்ஜாவிலிருந்து இன்று காலை கோவைக்கு அந்த விமானம் வந்தபோது, நடுவானில் விமான றெக்கையில் பறவையொன்று மோதியுள்ளது.

Coimbatore-Sharjah plane getting delayed

இதனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. எனவே கோவையிலிருந்து விமானம் கிளம்ப தாமதம் ஆனது. இதையடுத்து, அந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய 150 பயணிகளும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Coimbatore-Sharjah plane getting delayed due to technical issues.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற