அதிமுக ஸ்லீப்பர் செல் விஜயதாரணியிடம் விளக்கம் கேட்டது காங். மேலிடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுகவின் ஸ்லீப்பர் செல்தான் என கன்பார்ம் செய்த விஜயதாரணி- வீடியோ

  சென்னை: அதிமுகவின் ஸ்லீப்பர் செல்லாக தொடர்ந்து செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ. விஜயதாரணியிடம் காங்கிரஸ் மேலிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறவர் விஜயதாரணி. ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

  காங்கிரஸ் புறக்கணிப்பு

  காங்கிரஸ் புறக்கணிப்பு

  இதனால் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை புறக்கணிப்போம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரச்சர் அறிவித்தார். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

  ஜெ. பட திறப்புக்கு ஆதரவு

  ஜெ. பட திறப்புக்கு ஆதரவு

  ஆனால் நிகழ்ச்சி முடிந்த உடன் முதல்வர் எடப்பாடியார், சபாநாயகர் தனபால் ஆகியோரை நேரில் சந்தித்து ஜெயலலிதா படத் திறப்புக்காக 'மகிழ்ச்சி' தெரிவித்தார் விஜயதாரணி. அத்துடன் ஜெயலலிதா படத்தை திறந்து சரியே என செய்தியாளர்களிடம் விளக்கம் தந்தார்.

  விஜயதாரணியிடம் விளக்கம்

  விஜயதாரணியிடம் விளக்கம்

  இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் திருநாவுக்கரசர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் தற்போது விஜயதாரணியிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மீது நம்பிக்கை

  எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மீது நம்பிக்கை

  திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுக அரசுடன் நெருக்கம் பாராட்டி வருகின்றனர். இந்த நம்பிக்கையில் ஆட்சி கவிழாது என அதிமுக நம்பிக்கையோடு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  According to the sources said that The Congress high command has reportedly asked an explanation from Vijayadharani MLA on Jayalalithaa portrait row.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற