For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடர் வருமான வரிசோதனை: தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்..ஸ்டாலின் பரபரப்பு கோரிக்கை

தமிழகத்தில் நடக்கும் வருமான வரிசோதனைகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வருமான வரி சோதனைகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் நடக்கும் வருமான வரிசோதனைகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

    தற்போது அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Continuous IT raid in TN: Stalin seeks TN CM to resign

    சில நாட்களுக்கு முன்பு சத்துணவு ஒப்பந்ததாரரான கிறிஸ்டி நிறுவனம் மோசடி செய்தது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொடர் சம்பவங்கள் குறித்து ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில் பேட்டி அளித்தார்.

    அதில், செய்யாதுரைக்கு அளித்த நெடுஞ்சாலை துரை ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். செய்யாதுரை முதல்வரின் உறவினர் என்பதால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க கூடாது. அவருக்கு வழங்கிய ஒப்பந்தங்கள், டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலை பணிக்கு மறு டெண்டர் கோர வேண்டும்.

    இந்த டெண்டர் மூலம் முறைகேடாக கைமாறிய பணத்தை மீண்டும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை களத்தில் இறங்க வேண்டும். இந்த உழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும். முதல்வரே உறவினர்களை வைத்து டெண்டர்களை எடுத்துள்ளார்.

    முதல்வரின் செயல் பொதுவாழ்வில் தூய்மை என்ற கோட்பாட்டிற்கு எதிரானது. ரூபாய் 1000 மதிப்புள்ள டெண்டர்களை எடுத்து, அதில் அரசு கமிஷன் பார்த்து இருக்கிறது. பதவி பிரமாண உறுதிமொழியை முதல்வர் மீறிவிட்டார்.

    இதனால் ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவிவிலக வேண்டும். முதல்வர் பதவி விலகாமல் இருப்பது தமிழகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும். முதல்வருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடக்கிறது. ஆனால் முதல்வர் அமைதியாக இருக்கிறார். இதனால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Continuous IT raid in TN: Opponent leader Stalin seeks Tamil Nadu CM Edappadi Palanisammy's resignation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X