காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டாசு வெடித்து விபத்து... இருவர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பள்ளத்தெருவில் ஒரு வீட்டில் தீபாவளி பண்டிகைக்கு ஃபன்ட் பிடித்து வருகின்றனர். இதற்காக மாதாமாதம் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு பட்டாசுகளும், காரம், இனிப்பு ஆகியவை தீபாவளிக்கு முன்னர் வழங்குவர்.

Cracker blast near Kanchipuram Collectorate

அதன்படி பட்டாசுகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வீட்டில் சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த பட்டாசுகள் இன்று எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது.

இதில் அந்த வீட்டில் இருந்த இருவர் தீக்காயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து அமைச்சர் பெஞ்சமின், ஆட்சியர் பொன்னையன், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்துக்கு பக்கத்திலேயே நடந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Diwali crackers burst in the house near Kanchipuram Collectorate. 2 got injured and admitted in Kanchipuram govt hospital.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற