For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடைக்கு எதிரான சு.சுவாமி மனு டிஸ்மிஸ்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (சி.எஸ்.கே.) 2 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சி.எஸ்.கே நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது.

CSK's plea to lift suspension dismissed by Madras HC

2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணி சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் மற்றும் பல வீரர்கள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது பெரும் புயலைக் கிளப்பியது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

இக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் கொடுத்தது. இதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான மற்றொரு குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.

இக்குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகாலம் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் சி.எஸ்.கே. நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழு பிறப்பித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும் எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, சென்னை அணி மீதான தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்; சென்னை அணியை முடக்கியதில் லலித் மோடி, தாவூத் இப்ராகிம் ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறது என்றார்.

English summary
Madras High Court on Wednesday dismissed a petition by the owner of Chennai Super Kings (CSK) challenging Justice Lodha Committee's order suspending the Indian Premier League (IPL) team for two years over the 2013 betting scam involving its top official Gurunath Meiyappan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X