For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று #cyclonevardah

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயலால் சென்னையில் மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்றி வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வர்தா புயலின் மேற்கு பகுதி சென்னை அருகே கரையை கடந்துவிட்டது. பிற்பகல் 3 மணிக்கு துவங்கி புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருகிறது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது காற்று மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

#CycloneVardah: Wind speed touches 192kmph in Chennai

இந்நிலையில் இந்திய வானிலை மைய ஆய்வு அதிகாரி மஹபத்ரா கூறுகையில்.

வர்தா புயலால் சென்னையில் மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்றி வீசியது. தற்போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது என்றார்.

இன்னும் 2 மணிநேரத்தில் வர்தா புயல் முழுவதுமாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரலாற்றிலேயே தற்போது தான் முதல்முறையாக 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

English summary
According to Indian meteorological department, wind speed has touched 192 kmph in Chennai as Vardah is making landfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X