For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸ்சால் காணாமல் போன தீபா!

By Shankar
Google Oneindia Tamil News

தன்னை மோதும் எதிரியின் பலத்தில் பாதியை வாங்கிக்கொள்ளும் வரம் வாலிக்கு மட்டுமல்ல ஜெயலலிதாவுக்கும் இருந்தது. ஜெயலலிதாவுடன் மோதவே எதிரிகள் யோசிப்பார்கள். ஆனால் அவரது வாரிசாகத் துடிக்கும் தீபாவோ ஒரு முடிவை தெளிவாக எடுக்க முடியாமல் திணறுகிறார்.

பொறுமையிழக்கும் தொண்டர்கள்

தீபா வீட்டு வாசலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடுவது உண்மைதான். ஆனால் அதற்கு தீபா காட்டும் பிரதியுபகாரம் எப்போதாவது வந்து பால்கனியில் நின்று கைகாட்டுவது மட்டும்தான்... ஒன்றாம் தேதி வரும் சம்பளத்துக்கு மாதம் முழுக்க வேலை பார்ப்பது போல சில நிமிட தரிசனத்துக்காக தேவுடு காத்து நிற்கிறார்கள். சில உணர்ச்சிமிகு தொண்டர்கள் கோஷம் போட்டாவது தீபாவை வெளியில் அழைக்க முயற்சிக்கின்றனர். தீபாவை வாழ்த்தி கோஷம் போடுபவர்கள் சமயங்களில் கடுப்பாகி 'வெளியே வந்து தலைகாட்டும்மா...' என்று கோஷமிடுகிறார்கள்.

டீல் ஓகே வா?

டீல் ஓகே வா?

மத்திய அரசையும் சுப்ரீம் கோர்ட்டையுமே தன்வசப்படுத்தும் நடராஜனுக்கு தீபாவெல்லாம் ஜுஜுபி என்று சொன்னவர்களது வார்த்தைகள் உண்மையாகி விடுமோ என்று பயப்படுகிறார்கள் தீபாவை நம்பிப் போன கட்சி நிர்வாகிகள். அதற்கேற்றாற்போல் நடராஜன் அடிக்கடி ‘தீபா எங்கள் வீட்டுப்பெண். நிச்சயம் எங்களுடன் வருவாள்' என்று சொல்லி வருகிறார்.

அப்போல்லோவில் மீடியாவை அழைத்து பிரஸ் மீட் வைத்தபிறகும் கூட நீடிக்கிறது ஜெயலலிதா இறப்பின் மர்மம். ஆனால் அத்தை இறந்த சில நாட்களிலேயே ‘அத்தை மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை' என்று சரண்டர் ஆனார் தீபா. எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று தனது முடிவை அறிவிப்பேன் என்று சொன்னவர் அதை ஜெயலலிதா பிறந்தநாளுக்கு மாற்றினார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் போகப்போகிறேன் என்றவர் இதுவரை அப்படி எதையும் தொடங்கவில்லை.

பிஎச் பாண்டியன்

பிஎச் பாண்டியன்

சசிகலாவைத் தீவிரமாக எதிர்க்கும் பிஎச் பாண்டியன், மனோஜ் பாண்டியன், கேபி முனுசாமி ஆகியோர் தீபா பக்கம் தான் முதலில் வந்தார்கள். ஆனால் தீபாவின் போக்கால் வெறுத்துப்போய் அவர்கள் அமைதியாகி விட்டனர். தீபா முதலில் தெளிவாக ஒரு முடிவு எடுக்கட்டும். பின்னர் நாம் ஆதரிக்கலாம் என்று இருந்தவர்கள் இப்போது ஓபிஎஸ் பக்கம்.

வாய்ப்புகளை நழுவ விடும் தீபா

வாய்ப்புகளை நழுவ விடும் தீபா

அரசியலில் தனக்கு வரும் யார்க்கர் பந்துகளை கூட சிக்ஸர்களாக மாற்றி வென்றவர் ஜெயலலிதா. ஆனால் ஃப்ரீ ஹிட்களைக் கூட அடிக்க முடியாமல் தீபா தொண்டர்களை வெறுப்பேற்றுவது ஏன் எனப் புரியவில்லை. சசிகலா அதிரடியாக முதலமைச்சர் பதவியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசு சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலையில், தமிழகம் முழுக்கவே பொதுமக்கள் சசிகலாவுக்கு எதிராக திரளும் சூழ்நிலையில் தீபா பேசவே யோசிக்கிறார்.

ஓபிஎஸ் அழைப்பையும் நிராகரித்த தீபா

ஓபிஎஸ் அழைப்பையும் நிராகரித்த தீபா

சசிகலாவுக்கு எதிராக வெகுண்டெழுந்த ஓபிஎஸ்சுக்கு மக்கள் மத்தியிலும் கட்சியினரிடத்திலும் அமோக ஆதரவு பெருகுகிறது. தீபா வந்தால் சேர்த்துக்கொள்வேன் என்று ஓபிஎஸ்சே அறிவித்து விட்டார். ஆனால் இன்னமும் தீபா விடாப்பிடியாக இருந்து வருகிறார். இப்படியே போனால் தீபா காணாமல் போய்விட வேண்டியதுதான். தீபாவுக்கு இத்தனை நாட்களாய் கூடிய கூட்டம் தீபாவுக்காக கூடவில்லை. சசிகலாவுக்கு எதிராகக் கூடியது. அதனை தீபா உணர்ந்தே ஆகவேண்டும். இப்போதே ஜெயலலிதா போல தன்னை நினைத்துக்கொண்டால் இழப்பு அவருக்குத்தான், என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

- ஆர்.ஜி

English summary
Why J Deepa is hesitating to use the right chances in politics? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X