புருசனை அசிங்கமாகத் திட்டினாலும் கண்டுகொள்ளாத தீபா.. யாரப்பா அந்த ராஜா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி கிளம்பியிருக்கும் ஜெ தீபா பிரச்சினையில் அதிகமாக அடிபடும் பெயர் ராஜா. நேற்றும் இன்றும் மீடியாவில் இவரைப் பற்றித்தான் பேச்சு.

காரணம், தீபாவை நீ வா போ என ஒருமையில் விளிக்கிறார் இந்த ராஜா. தீபாவின் கணவன் மாதவனை ஊரில் பேசும் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் விளிக்கிறார்.

'... த்தா' என்று ஆரம்பித்து, திருட்டு நாயே... ஜெயலலிதா பணம் நகைகளைக் கொள்ளையடித்தவன் தானேடா நீ..' என்று பொதுமக்கள் மற்றும் போலீசார் முன்பாகவே திட்டுகிறார். இதைக் கண்டும் காணாமல் தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருக்கிறார் தீபா.

யார் இந்த ராஜா?

யார் இந்த ராஜா?

இவர் தீபாவின் கார் டிரைவர். பின்னர் தீபா ஆரம்பித்த எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஜெ தீபா தனக்கு பொருளாளர் பதவி போதும் என்றார்.

கார் டிரைவருக்கு பொதுச் செயலாளர் பதவியா

கார் டிரைவருக்கு பொதுச் செயலாளர் பதவியா

கார் டிரைவருக்கு இந்தப் பதவியா என விமர்சனங்கள் எழுந்தன. பலர் தீபா அணியிலிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர்தான் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்ற தீபா, ராஜாவை பேரவை நிர்வாகியாக அறிவித்தார்.

மாதவனுக்கு மரியாதை இல்லை

மாதவனுக்கு மரியாதை இல்லை

தீபாவை ஒருமையில் விளித்துப் பேசும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் ராஜாவுக்கும் தீபா கணவன் மாதவனுக்கும் நீண்ட நாட்களாகவே பிரச்சினை என்று கூறப்படுகிறது.

தீபா தரும் இடம்

தீபா தரும் இடம்

ராஜாவுக்கு தீபா தரும் முக்கியத்துவத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் மாதவன் தனிக்கட்சி தொடங்கினார் என்பார்கள். நேற்று அது உண்மைதான் என்று அவர்களே நிரூபித்து விட்டார்கள்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Raaja, the person who dominating J Deepa is her MGR Amma Deepa Peravai admin an now playing key role in Deepa's political life.
Please Wait while comments are loading...