டெங்கு கட்டுக்குள் தான் இருக்கிறது... சொல்வது துணை முதல்வர் ஓபிஎஸ் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெங்குக் காய்ச்சல் குறித்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதுமட்டுமில்லாமல் ஆங்காங்கே மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைகளில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

Deputy CM talk on Dengue fever and its spread

ஆகையால் டெங்குக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால், சிலர் வாய்க்கு வந்தபடி டெங்கு மரணங்கள் குறித்து தவறான புள்ளிவிவரங்களைக் கூறிவருகின்றனர் என கூறினார்.

ஆனால், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் சராசரியாக 10 பேர் டெங்குவுக்கு பலியாகின்றனர். அதுமட்டுமில்லாமல் டெங்குவுக்கு மருந்து இல்லை என குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Deputy CM Told that Dengue fever is in control and some people saying wrong statistics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற