For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. சதுரகிரி மலைக்கு செல்ல தடை!

ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

Google Oneindia Tamil News

விருதுநகர்: ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 7 ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

[விடாமல் கொட்டி தீர்த்த மழை.. 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!]

அமாவாசை

அமாவாசை

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் அமாவாசை நாளில் சதுரகிரி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

இம்மாதம் வரும் 8ஆம் தேதி அமாவாசை வருகிறது. இந்நிலையில் 7 ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

ஆட்சியர் தடை

ஆட்சியர் தடை

சதுரகிரி, சாஸ்தா, அய்யனார் கோவில் ஆற்றுப்படுகைகளுக்கு செல்லவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் விருதுநகர் ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

நீர்வரத்து அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரிப்பு

மேலும் அக்டோர் 10 ஆம் தேதி வரை ஆற்றை கடந்து கோவில்களுக்கு செல்லக்கூடாது என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Devotees not allowed to go Sathuragiri mount due to red alert.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X