27 எருமை மாடுகள்.. 31 கிடாய்களை பலியிட்டு ரத்தம் குடித்த பக்தர்கள்.. சிவகங்கையில் மிரட்டல் திருவிழா!

சிவகங்கை: பழமலை நகரில் எருமை மாடுகளை பலியிட்டு ரத்தத்ததை குடிக்கும் வினோத திருவிழா நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள பையூர் பழமலை நகரில் நரிக்குறவர் (காட்டுராஜா) சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரை வீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தங்களின் குல தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து கடந்த 20ம் தேதி காப்பு கட்டினர். இன்று மது எடுப்புடன் இந்த திருவிழா நிறைவடையும்.

எருமைகளை பலியிட்டு
இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் உள்ள முதல் மாடு தலையை அசைத்து சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்து, அதை பலியிட்டனர்.

கழுத்தில் வெட்டப்பட்ட மாடுகள்
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்பட்டன.
நீண்ட வாள் மற்றும் அரிவாளால் எருமை மாடுகளின் கழுத்தில் வெட்டப்பட்டன.

ரத்தத்தை குடித்தனர்
கழுத்தில் வெட்டியவுடன் அதிலிருந்து பீச்சியடிக்கும் ரத்தத்தை பூசாரி உட்பட காப்புக் கட்டியவர்கள் அனைவரும் குடித்தனர். காளியை வணங்கியவர்கள் எருமை, பிற தெய்வங்களை வணங்கியவர்கள் ஆடுகளை பலியிட்டனர்.

27 எருமைகள்
இவ்வாறு 27 எருமை மாடுகள் மற்றும் 31 ஆட்டு கிடாய்கள் வெட்டி பலியிடப்பட்டன. இவ்விழா சுமார் 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது கடந்த 2013ம் ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு இவ்விழா நடத்தப்பட்டது.

ரத்தம் குடிக்கும் காரணம்
காளி அசுரனை (எருமை) வதம் செய்த போது, தரையில் சிந்திய ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் எனவும், அதனால் அதை சிந்த விடாமல் குடித்து விடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!