கச்சத்தீவு அந்தோணியர் திருவிழா... பங்கேற்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வேர்க்கோடு சூசையப்பர் ஆலயத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் புதன்கிழமை முதல் வரும் 12-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 60 படகுகள் செல்ல இருப்பதாகத் கூறப்பட்டுள்ளது.

Devotees willing to attend St Antony's church festival at Katchatheevu can apply

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல விரும்புவோர் வேர்க்கோடு சூசையப்பர் ஆலயத்தில் உள்ள கச்சத்தீவு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என்றும் படகு எண், படகின் உரிம விவரங்கள் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பங்குத் தந்தை அந்தோணிசாமி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Devotees willing to attend St Antony's church festival at Katchatheevu can apply from tomorrow says Bishop

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X