குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து பேரணி.. ரஜினி குடும்பத்தோடு கலந்து கொண்ட தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக நடத்தப்படும் தேசிய அளவிலான யாத்திரையில் சென்னையில் நடிகர் தனுஷ் பங்கேற்றார்.

குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளில் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை அனைவரும் உறுதி செய்யும் வகையில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பேரணி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லியில் முடிவடையும் இந்த பேரணி இன்று சென்னையை அடைந்தது.

 தனுஷ் குடும்பம்

தனுஷ் குடும்பம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில் நடிகர் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சிறுமி ஹாசினி வன்கொடுமை வழக்கு, குற்றவாளி மீதான குண்டாஸ் ரத்து!-வீடியோ
   ரஜினி குடும்பம்

  ரஜினி குடும்பம்

  இதே போன்று நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா உள்ளிட்டோரும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   குழந்தைகளைக் காப்போம்

  குழந்தைகளைக் காப்போம்

  பேரணியின் போது குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுப்போம் என்ற பதாகைகளை ஏந்தி ஏராளமானோர் பங்கேற்றனர்.

   ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி

  ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி

  இதே போன்று குழந்தைகள் மீதான வன்கொடுமையை நிறுத்துங்கள் என்ற பதாகையுடன் லதா ரஜினிகாந்த் தன்னுடைய பங்கை ஆற்றினார். கூடவே லதாவின் சகோதரியும், ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியுமான சுதாவும் கலந்து கொண்டார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Dhanush, Latha Rajinikanth and her daughters participated in an National Yatra against all harm for children at Chennai, starting at Kanyakumari and finishing at New Delhi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற