மருத்துவமனையை இடித்தால் சாகும் வரை உண்ணாவிரதம்! தருமபுரம் ஆதினம் அறிவிப்பால் பரபரப்பு!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதினம் சார்பில் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்ட இலவச மருத்துவமனையை இடிப்பதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என தருமபுரம் ஆதினத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இது 1943 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதினத்தின் 24 ஆவது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் அவருடைய தாயின் நினைவாக ஆதினத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரசவ மருத்துவமனையை கட்டினார்.

8 ஆண்டுகள் கட்டுமான பணி நிறைவடைந்து மருத்துவமனையானது கடந்த 1951 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் குமாரசாமி ராஜா திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையை நகராட்சி நிர்வாகத்திடம் தருமபுரம் ஆதினம் ஒப்படைத்தது.
ஆனால் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அந்த மருத்துவமனை கட்டடம் பழுதடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த கட்டடத்தை தங்களிடமே ஒப்படைக்குமாறு தருமபுரம் ஆதினத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆதினம் எழுதிய கடிதத்திற்கு பதில் வராத நிலையில் அந்த கட்டடத்தை இடிக்க போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த மருத்துவமனையை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம் என ஆதினம் கூறியிருந்தார். அதன் பிறகு அந்தக் கட்டடம் இடிக்கப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அந்த கட்டடத்தை இடிக்க நாளை பூமிபூஜை போடப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தருமபுரம் ஆதினம் சார்பில் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் "இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்கப் போவதாக முன்பு தகவல் வந்தது. முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப் பெற்றது. மீண்டும் நாளை பூமி பூஜை போடுவதாக அறிந்தோம். வெளியூர் நிகழ்வில் இருக்கிறேன் இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் உயிர்போகும் வரை உண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள் கட்டியதை காப்போம்". இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications