அமைதிப்படை அமாவாசைகளாக ஈபிஎஸ்,ஓபிஎஸ்: தினகரன் சரமாரி தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைதிப்படை திரைப்படத்தில் வரும் அமாவாசை பாத்திரம் போல ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்பட்டு வருகின்றனர் என டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:

Dinakaran Slams EPS, OPS,

தம்மை முதல்வராக்கிய எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி மிரட்டுக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை ஊருக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.

இன்னும் ஒருவாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கவிழ்க்கப்படும். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அமைதிப்படை அமாவாசைகளாக இருக்கின்றனர். இருவரும் தேர்ந்த நடிகர்கள்.

திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதன் மூலம் ஸ்டாலின் எங்களுக்கு உதவி இருக்கிறார். ஆனால் திமுகவுடன் கூட்டணி என்று எதுவும் இல்லை.

இவ்வாறு தினகரன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran slammed CM Eappaadi Palanisamy and Deputy CM O Panneerselvam.
Please Wait while comments are loading...