Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறந்தநாளுக்குக் கூட வராத தளபதி! கோவிலில் விஜய் பெயரில் அர்ச்சனை! உருகி வேண்டிய எஸ்ஏசி! அப்பா சார்!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை : 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்ததோடு மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து உருகி வேண்டிக் கொண்டார்.

Recommended Video

    பிறந்தநாளுக்குக் கூட வராத தளபதி! கோவிலில் விஜய் பெயரில் SAC அர்ச்சனை! - வீடியோ

    பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி. என அழைக்கப்படும் எஸ்.ஏ. சந்திரசேகர் 1981ஆம் ஆண்டு "சட்டம் ஒரு இருட்டறை" என்ற திரைப்படத்தினை இயக்கி பிரபலமானார்.

    இப்படமானது தமிழில் மிக பெரிய வெற்றியை பெற்று அவருக்கு புகழ் கொட்டிக் கொடுத்தது. ஆனால் அதற்கு முன்னதாக படம் இயக்கியிருந்தாலும், இந்த படம் தான் பட்டிதொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்ந்தது.

    எஸ்.ஏ.சந்திரசேகர்

    எஸ்.ஏ.சந்திரசேகர்

    தனது திரைப்பட தொடக்க காலத்தில் இவர் தொடர்ந்து நடிகர் விஜயகாந்தை நாயகனாக கொண்டு பல வெற்றி படங்களை இயக்கி புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து தனது மகனான விஜய்யை நாளைய தீர்ப்பு மூலம் நடிகராக களமிறக்கினார். ஆனால் அப்படம் படுதோல்வியடைந்தது. நடிகர் விஜய் உருவத்தை வைத்து பல கேலிகிண்டல்களையும் பலர் செய்தனர்.

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    ஆனாலும் மனம் தளராத எஸ்ஏசி தனது மகன் விஜயை வைத்து தொடர்ந்து பல படங்களை இயக்கினார். குறிப்பிட்ட தகுந்த வெற்றி கிடைக்காத நிலையில் செந்தூரப்பாண்டி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து லவ் டுடே, பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் திருமலை படத்தின் மூலம் ஆக்சன் கதாநாயகனாக அவதாரம் தரித்தார்.

    தந்தை மகன் மோதல்

    தந்தை மகன் மோதல்

    அதன் பிறகு அவரது வாழ்க்கையில் ஏறு முகம் தான் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகரான விஜய்க்கு இலட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அதற்கு முன்னர் ஓடாவிட்டாலும் நடிகர் விஜய்யை வைத்து அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் ,ரசிகன், தேவா, விஷ்ணு, ஒன்ஸ்மோர் ,உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். திரையுலகில் உச்சம் தொட்ட பிறகு அரசியல் ஆசை கொண்ட நடிகர் விஜய்க்கு அவரது தந்தைக்கும் இடையே மோதல் மூண்டது.

    தந்தையின் பிறந்தநாள்

    தந்தையின் பிறந்தநாள்

    மகன் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்ததாகவும் இதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தொடர்ந்து பல நாட்கள் தந்தையை சந்திக்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்ஏ சந்திரசேகரின் எண்பதாவது பிறந்த நாள் வந்தது. அந்த நிகழ்ச்சியில் மகன் விஜய் கலந்து கொள்ளாத நிலையில் எஸ்.ஏ சந்திரசேகரம் அவரது மனைவி ஷோபா மட்டும் வீட்டில் தனியாக அமர்ந்து கேக் வெட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    என்ன இருந்தாலும் தந்தையின் பிறந்தநாளுக்கு கூட விஜய் வர மாட்டாரா என கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்ததோடு மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து உருகி வேண்டிக் கொண்டார். சிவன், எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரம் அளித்த தளமாக விளங்குவதால் பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும்.

    மகனுக்காக வேண்டுதல்

    மகனுக்காக வேண்டுதல்

    இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து கொண்டார். எஸ். ஏ. சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தனது மகன் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+