For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எம்எல்ஏ ஹாஸ்டலை காலி செய்ய சபாநாயகர் உத்தரவு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் எம்எல்ஏ ஹாஸ்டலை உடனடியாக காலி செய்ய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் எம்எல்ஏ விடுதியை உடனடியாக காலி செய்ய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேர் திரும்பப்பெற்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

Disqualified MLAs should leave MLA hostel immediately: Speaker Dhanapal

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஜனநாயக படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் எம்எல்ஏ விடுதியை உடனடியாக காலி செய்ய சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். 18 எம்எல்ஏக்களும் சட்டசபை விடுதியை காலி செய்ததும் அறைகளுக்கு சீல் வைக்க விடுதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

English summary
Speaker Dhanapal orders ADMK MLAs who has been disqualified they should leave MLA hostel immediately. after MLAs vacating the hostel they they plan to seal their rooms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X