For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீனிக்ஸ் பறவை போல திமுக எழுச்சி பெற்றுள்ளது: பயிற்சி பட்டறையில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக பீனிக்ஸ் பறவையை போல் எழுந்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சமூக வலைத்தள பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்களை கையில் எடுத்துள்ளது திமுக. ஒருபக்கம் மிஸ்டுகால் மூலம், தலைவர் கருணாநிதி வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டார். அதேபோல சமூக ஊடகங்கள் மூலம் தீவிர பிரச்சாரம் செய்யுமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் பொருளாளர் மு..க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் என இன்றைய இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்க, அவர்களை கவர்ந்து வாக்குகளை பெறவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தள பயிற்சி பட்டறை

சமூக வலைத்தள பயிற்சி பட்டறை

'சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில், "சமூக வலைதளப் பயிற்சி கருத்தரங்கம்" நடைபெற்றது அதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், கழக தொண்டர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கழகத்தின் கொள்கைகள் மற்றும் சாதனைத் திட்டங்கள் ஆகியவற்றை வலைத்தளங்களில் பதிவு செய்து மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்

ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்

சமூக வலைதளங்களைச் சுமார் 200 மில்லியன் இந்தியர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் செல்போன் மற்றும் இணையத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்கள். வெளிப்படையான, ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு சமூக வலை தளங்கள் பேருதவியாக இருக்கிறது என்றார்.

திறமையாக பயன்படுத்துங்கள்

திறமையாக பயன்படுத்துங்கள்

எனவே அரசியல் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்காற்றும் வலை தளங்களின் தேவையை உணர்ந்து அதை முறைப்படி பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் இந்த பயிற்சி கருத்தரங்கம் சமூக வலை தளங்களை திறமையாக கையாளுவதற்கு தேவையான போதிய பயிற்சியை அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

மக்களின் கவனத்திற்கு

மக்களின் கவனத்திற்கு

தொண்டர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கழகத்தின் கொள்கைகள் மற்றும் சாதனைத் திட்டங்கள் ஆகியவற்றை வலைத்தளங்களில் பதிவு செய்து மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.

பீதிகளை பரப்ப வேண்டாம்

பீதிகளை பரப்ப வேண்டாம்

அதேநேரத்தில், வதந்திகளையும், பீதிகளையும் பரபப்புவதற்கு சமூக வலை தளங்களை யாரும் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்

ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்

வலிமையான தமிழகத்தை உருவாக்கிட ஆக்க பூர்வமான கருத்துக்களை பதிவு செய்து நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிஸ்டுகால் பிரச்சாரம்

மிஸ்டுகால் பிரச்சாரம்

மிஸ்டு கால் மூலமாக திமுக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 72200 72200 என்ற தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அந்த எண்ணுக்கு திமுகவிடமிருந்து அழைப்பு வரும் என்றும், திமுக தலைவர் கருணாநிதி, திமுகவுக்கு ஆதரவளிக்குமாறு பேசுவார்

English summary
DMK treasure M.K. Stalin addressed the gathering and shared his thoughts on the importance of social media in controlling the election narrative.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X