பேரறிவாளன் பரோல் தொடர்பாக சட்டசபையில் திமுக கவனஈர்ப்பு தீர்மானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் பரோல் தொடர்பாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்துள்ள ஸ்டாலின் நடிகர் சஞ்சய் தத்திற்கு கொடுத்தது போல மாநில அரசே பேரறிவாளனுக்கு பரோல் தரவேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

DMK has brought attentive resolution on the parole of Perarivalan.

இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய ஏற்கனவே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், பரோல் வழங்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு மாநில அரசே பரோல் வழங்கி உள்ளது. அதேபோல் பேரறிவாளனுக்கும் மாநில அரசே பரோல் வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

நேற்று பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் பரோல் தொடர்பாக ஸ்டாலினைச் சந்தித்தார். மேலும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோரும் ஸ்டாலினை சந்தித்து பேசினர். இந்நிலையில் பேரறிவாளர் பரோல் தொடர்பாக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK has brought attentive resolution on the parole of Perarivalan. Stalin urged that Tamilnadu govt to give parole for Perarivalan like Actor Sanjay dutt.
Please Wait while comments are loading...